Last Updated:
இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் மூலம் 45 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இந்தியா இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவிடமிருந்து 45 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதன்படி, இரு நாடுகளும் முதல்கட்ட இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கான கூட்டறிக்கையை தயாரிக்கும் பணியில் இரு நாடுகளும் ஈடுபட்டுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து, ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் 2 லட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களுக்கு 18 சதவீத வரியே இருக்கும்.
இதன்மூலம், தொழிலாளர்கள் அடிப்படையிலான பொருட்கள் ஏற்றுமதிக்கு பலன் கிடைக்க உள்ளது.
வாகனங்கள், உருக்கு உள்ளிட்ட துறைகளுக்கான பொருட்கள் மீதான வரியில் மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவிலிருந்து அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, விமானங்கள், விமான உதிரிபாகங்கள், மதிப்புமிகுந்த உலோகங்கள், வைரங்கள், தொழில்நுட்பப் பொருட்கள், தரவு மையங்களுக்கான பொருட்கள் ஆகியவற்றை இந்தியா இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன்படி, பொருளாதார உறுதித்தன்மைக்கு முக்கியத்துவம் வாய்ந்த 45 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளன.
Feb 04, 2026 12:35 PM IST
அமெரிக்காவிடமிருந்து ரூ.45 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்கள் இறக்குமதி – இந்தியா அரசு திட்டம்


