அவர்கள் பல ஆண்டுகளாக அப்பாவி கிறிஸ்தவர்களை இலக்காகக் கொண்டு கொடூரமாகக் கொன்று வருகின்றனர். கிறிஸ்தவர்களைப் படுகொலை செய்வதை நிறுத்தவில்லை என்றால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று நான் இதற்கு முன்பு அந்தப் பயங்கரவாதிகளுக்கு எச்சரித்திருந்தேன், இன்று இரவு அது நடந்தது.
அமெரிக்காவால் மட்டுமே செய்யக்கூடிய வகையில், போர்த் துறை பல கச்சிதமான தாக்குதல்களை நடத்தியது. எனது தலைமையின் கீழ், நமது நாடு தீவிரவாத இஸ்லாமியப் பயங்கரவாதம் செழிக்க அனுமதிக்காது. கடவுள் நமது ராணுவத்தை ஆசீர்வதிக்கட்டும்.
மேலும் இறந்த பயங்கரவாதிகள் உட்பட அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். அவர்கள் கிறிஸ்தவர்களைப் படுகொலை செய்வதைத் தொடர்ந்தால், இன்னும் பலர் கொல்லப்படுவார்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் நைஜீரிய அரசு, “ஆயுதக் குழுக்கள் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இருவரையும் குறிவைக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் மட்டுமே துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற ட்ரம்பின் கூற்றுகள் முழுமையானது அல்ல.
மத சுதந்திரத்தைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட முயற்சிகளை ட்ரம்ப் புறக்கணிக்கிறார். ஆனால், போராளிக் குழுக்களுக்கு எதிராக எங்கள் படைகளை வலுப்படுத்த அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறது.

