Last Updated:
இந்த விபத்தில் சிலர் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் நடுவானில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்ள இருந்த கோர சம்பவம் நூலிழையில் தவிர்க்கப்பட்டது.
கலிபோர்னியாவில் இருந்து லாஸ் வேகாஸ்க்கு சவுத்வெஸ்ட் விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் எதிர்திசையில் வரும் விமானத்தின் மீது மோத உள்ளதாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து எச்சரிக்கப்பட்டது. இந்த சூழலை திறம்பட கையாண்ட விமானிகள் 36 விநாடிகளில் 300 அடிக்கு விமானத்தை கீழ் இறக்கி விபத்தை தவிர்த்தனர். திடீரென விமானம் கீழ் இறக்கப்பட்டதால் பயணிகள் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் சிலர் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த, உள்ளூர் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுக்கள் விரைவாக செயல்பட்டன. மேலும், இந்த விபத்தில் யாருக்கும் கடுமையான காயங்கள் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
July 27, 2025 8:28 AM IST
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் சக்கரத்தில் தீ.. ஓடுபாதையில் தரையிறங்கிய போது தீப்பற்றியதால் பரபரப்பு!