Last Updated:
ஈரானுடனான பல நூறாண்டு கால நட்புறவைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு எடுக்கப்போகும் முடிவே இதில் திருப்புமுனையாக அமையும்.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான மோதல் மற்றும் பதற்றமான சூழலுக்கு மத்தியிலும், இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தும் நோக்கில் ஈரான் ஒரு முக்கிய அதிகாரப்பூர்வ முன்மொழிவை (Official Proposal) இந்திய அரசிடம் வழங்கியுள்ளது. டெஹ்ரான் மற்றும் புதுடெல்லி இடையே புதிய ஈரானிய ஏர்லைன்ஸ் நிறுவனம் மூலமாக நேரடி விமான சேவையை உடனடியாகத் தொடங்க ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளது.


