ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையே தொலைபேசி வழியிலான உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
ஈரானிலிருந்து ஐக்கிய அமீரகத்தை நோக்கி இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட முன் இந்த அழைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த உரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன்களை மேம்படுத்துவதற்காக உறவுகளை வலுப்படுத்தும் வழிகள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடியதாக குறிப்பிடப்படுகின்றது.
அண்மைக்கால மாற்றங்கள்
மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தற்போதைய கள நிலவரங்கள் குறித்தும் அண்மைக்கால மாற்றங்கள் குறித்தும் இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்ட போதிலும், விவாதிக்கப்பட்ட பொருட்கள் குறித்து கூடுதல் விபரங்கள் எதனையும் செய்தி நிறுவனம் வெளியிடவில்லை.

ஹோர்முஸ் நீரிணையை நிர்வகிப்பது தொடர்பாக ஈரானுடன் ஒப்பந்தம் செய்ய முயன்ற அமீரகத்தின் அண்டை நாடான ஓமான் மீது குண்டுவீச்சு நடத்தப்படும் என ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்த மறுநாளே இந்தத் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

