• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

அமீரகத்தில் ‘ஆசிய கோப்பை 2025’ கிரிக்கெட் தொடர்: செப். 14-ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் பலப்பரீட்சை! | asia cup 2025 in uae team india to face pakistan on september 14

GenevaTimes by GenevaTimes
July 27, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
அமீரகத்தில் ‘ஆசிய கோப்பை 2025’ கிரிக்கெட் தொடர்: செப். 14-ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் பலப்பரீட்சை! | asia cup 2025 in uae team india to face pakistan on september 14
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


துபாய்: ஆசிய கோப்பை – 2025க்கான தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9 முதல் 28-ம் தேதி வரையில் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் டி20 கிரிக்கெட் பார்மெட்டில் நடைபெறுகிறது. இதில் குரூப் சுற்று, ‘சூப்பர் 4’ சுற்று மற்றும் இறுதிப் போட்டி என ஆட்டங்கள் நடைபெற உள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணி நடப்பு சாம்பியனாக பங்கேற்கிறது. கடந்த 2023-ல் இந்திய அணி ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.

குரூப் – ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், குரூப் – பி பிரிவில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, ஹாங் காங் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் குரூப் சுற்று போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14-ம் தேதி நடைபெறுகிறது.

இந்த தொடரில் மொத்தம் 19 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. துபாய் மற்றும் அபுதாபியில் ஆட்டங்கள் நடைபெறும். ஒவ்வொரு அணியிலும் 17 வீரர்கள் வரை இடம்பெறலாம் என ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மூன்று முறை நேருக்கு நேர் பலப்பரீட்சை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. அதில் குரூப் சுற்று ஆட்டம் உறுதியாகி உள்ளது. இரு அணிகளும் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு முன்னேறினால் அந்த சுற்றிலும், இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் அதிலும் விளையாடும் வாய்ப்புள்ளது. இந்த முறை ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை இந்தியா பெற்றுள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் உடனான ஒப்பந்தம் காரணமாக இரு நாடுகளுக்கும் பொதுவான இடத்தில் இந்த தொடர் நடத்தப்படுகிறது.

இந்தியா விளையாடும் போட்டிகள் (குரூப் சுற்று மட்டும்)

  • செப்டம்பர் 10 – இந்தியா vs ஐக்கிய அரபு அமீரகம்
  • செப்டம்பர் 14 – இந்தியா vs பாகிஸ்தான்
  • செப்டம்பர் 19 – இந்தியா vs ஓமன்



Read More

Previous Post

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவிநீக்க முதலில் மக்களவையில் தீர்மானம் கொண்டு வரப்படும்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல் | resolution to remove Justice Yashwant Verma brought in Lok Sabha Kiren Rijiju

Next Post

உலகின் நம்பிக்கையான தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடம் | Prime Minister Modi tops list of most trusted leaders in world

Next Post
உலகின் நம்பிக்கையான தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடம் | Prime Minister Modi tops list of most trusted leaders in world

உலகின் நம்பிக்கையான தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடம் | Prime Minister Modi tops list of most trusted leaders in world

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin