Last Updated:
கடந்த 10 ஆண்டுகளில் எம்பி, எம்எல்ஏக்கள் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த 193 வழக்குகளில், 2 வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் எம்பி, எம்எல்ஏக்கள் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்குகளில் இரண்டில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் கேரள எம்பி ஏ.ஏ.ரஹீம் எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதித்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில், கடந்த 10 ஆண்டுகளில் எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மீது அமலாக்கத்துறை 193 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 2022-23ஆம் நிதியாண்டில் 32 வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 10 ஆண்டுகளில் இதுவரை 2 வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2016-17ஆம் நிதியாண்டிலும், 2019-2020ஆம் நிதியாண்டிலும் தலா ஒரு வழக்கில் மட்டுமே அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
March 19, 2025 9:50 PM IST
அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் எத்தனை வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது – மத்திய அரசு பதில்


