• Login
Friday, July 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அபுதாபி நிறுவனத்துடன் கைகோர்த்த அதானி.. சும்மாயில்ல பாஸ்.. ரூ.1.10 லட்சம் கோடி டீல் நடந்திருக்கு! | Adani Group Partners with Abu Dhabi’s IHC in ₹1.10 Lakh Crore Deal to Build India’s Largest Aluminum Plant in Odisha

GenevaTimes by GenevaTimes
July 3, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
அபுதாபி நிறுவனத்துடன் கைகோர்த்த அதானி.. சும்மாயில்ல பாஸ்.. ரூ.1.10 லட்சம் கோடி டீல் நடந்திருக்கு! | Adani Group Partners with Abu Dhabi’s IHC in ₹1.10 Lakh Crore Deal to Build India’s Largest Aluminum Plant in Odisha
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அபுதாபி நிறுவனத்துடன் கைகோர்த்த அதானி.. சும்மாயில்ல பாஸ்.. ரூ.1.10 லட்சம் கோடி டீல் நடந்திருக்கு!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் அதானி குழுமம் அபுதாபியை சேர்ந்த இண்டர்நேஷ்னல் ஹோல்டிங் கம்பெனி என முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து ஓடிசாவில் மாபெரும் அலுமினிய உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது. இதற்காக 11.5 பில்லியன் டாலர் இந்திய ரூபாய் மதிப்பில் 1.10 லட்சம் ரூபாய் தொகையை பல கட்டங்களாக முதலீடு செய்ய உள்ளது.

அதானி குழுமம் நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை தேவையாக இருக்கும் மின்சாரம், துறைமுகம், உள்கட்டமைப்பு துறையில் அதிகப்படியான முதலீட்டை செய்துள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக அனைத்தும் துறைக்கும் முக்கிய தேவையாக இருக்கும் உலோக துறையில் தற்போது முதலீடு செய்ய துவங்கியுள்ளது.

அபுதாபி நிறுவனத்துடன் கைகோர்த்த அதானி.. சும்மாயில்ல பாஸ்.. ரூ.1.10 லட்சம் கோடி டீல் நடந்திருக்கு!

அதானி குழுமம் ஏற்கனவே காப்பர் உற்பத்தி ஆலையை குஜராத்தில் அமைத்திருக்கும் வேளையில் தற்போது புதிதாக ஓடிசாவில் அலுமினியம் தயாரிப்பு ஆலையை அமைக்க உள்ளது. இந்த ஆலை மூலம் இந்தியாவின் மொத்த அலுமினிய தேவையில் சுமார் 50 சதவீதத்தை அதானி குழுமம் பூர்த்தி செய்ய தயாராகி வருகிறது. இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 55 லட்சம் அலுமினியம் பயன்படுத்தப்படுகிறது.

கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் IHC நிறுவனத்துடன் இணைந்து வருடத்திற்கு 20 லட்சம் டன் அலுமினியம் தயாரிக்கும் ஆலையை ஓடிசாவில் அமைக்க உள்ளது. இந்த 1.10 லட்சம் கோடி முதலீடு என்பது இந்திய உலோக துறையில் செய்யப்பட்டும் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டு திட்டமாக உள்ளது.

மோடி தலைமையிலான நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த உற்பத்தி துறையில் அதிகப்படியான கவனத்தை செலுத்தி வரும் காரணத்தால் அனைத்து விதமான உலோகத்திற்கும் தேவை அதிகரிக்கும் சூழல் உள்ளது. மேலும் மேக் இன் இந்திய கொள்கை கீழ் நாட்டின் தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என நிலைப்பாடு இருக்கும் காரணத்தால் இத்துறையில் செய்யப்படும் முதலீடு பெரும் லாபம் கிடைக்கும்.

இதேவேளையில் இந்தியாவில் இருக்கும் முன்னணி உலோக உற்பத்தி நிறுவனங்களான ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், வேதாந்தா அலுமினியமும் தனது உற்பத்தி திறனை மேம்படுத்த துவங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது 42 லட்சம் டன் அலுமினியம் தயாரிக்கப்படும் வேளையில், 2047ஆம் நிதியாண்டுக்குள் ஆண்டுக்கு 37 மில்லியன் டன் அலுமினியம் உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது, காரணம் தொடர்ந்து தேவை அதிகரித்து வருகிறது.

இண்டர்நேஷ்னல் ஹோல்டிங் கம்பெனி என்பது அபுதாபியை ஆட்சி செய்யும் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. ஷேக் தனூன் பின் சையத் அல் நயான் தலைமையில் இந்நிறுவனம் இயங்கி வருகிறது. இண்டர்நேஷ்னல் ஹோல்டிங் கம்பெனி ரியல் எஸ்டேட், ஹெல்த்கேர், டெக்னாலஜி என பல துறையில் இயங்கி வந்தாலும் இந்தியாவில் எனர்ஜி, இன்பரா துறையில் அதிகம் முதலீடு செய்துள்ளது.

இந்த 11.5 பில்லியன் டாலர் திட்டம் மூலம் ஓடிசா நாட்டின் மிக முக்கியமான உலோக உற்பத்தி பகுதியாக மாற உள்ளது. ஏற்கனவே ஓடிசா மாநிலத்தின் Sundargarh பகுதியில் சுமார் 10 பில்லியன் டாலர் முதலீட்டில் நிலக்கரி டூ கெமிக்கல் ஆலையை அமைக்க அதானி குழுமம் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து இது 2வது பெரிய முதலீடாக உள்ளது.

அதானி குழுமம் ஏற்கனவே தர்மா துறைமுகத்தை நிர்வாகம் செய்து வரும் வேளையில் இம்மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்களையும் உள்நாட்டிற்கும், வெளிநாட்டிற்கும் விரைவாக ஏற்றுமதி செய்யும் கட்டமைப்பையும் அதானி குழுமம் கொண்டுள்ளது கூடுதல் பலம்.

Share This Article

English summary

Adani Group Partners with Abu Dhabi’s IHC in ₹1.10 Lakh Crore Deal to Build India’s Largest Aluminum Plant in Odisha

Adani Group has joined hands with Abu Dhabi’s International Holding Company (IHC) to invest ₹1.10 lakh crore in setting up a massive 20 lakh tonne per annum aluminum plant in Odisha, marking one of India’s biggest foreign investments in the metals sector. This strategic project is set to fulfill nearly 50% of India’s annual aluminum demand, strengthen domestic manufacturing under Make in India, and accelerate industrial growth in Odisha.

Story first published: Thursday, July 2, 2026, 12:12 [IST]

Other articles published on Jul 2, 2026

Read More

Previous Post

தினமும் தங்கத்தை கக்கும் எரிமலை.. சுமார் 19 கோடி மதிப்பிலான கோல்ட்டை துப்புமாம்! மிரண்ட ஆய்வாளர்கள் | What is Antarctica gold: Mount Erebus Spews Gold Worth Over $2 Million Into the Air Every Year

Next Post

LRT3 திட்ட சர்ச்சை: சிலாங்கூர் சுல்தானைச் சந்திக்க அனுமதி கோரும் அந்தோனி லோக்! | Makkal Osai

Next Post
LRT3 திட்ட சர்ச்சை: சிலாங்கூர் சுல்தானைச் சந்திக்க அனுமதி கோரும் அந்தோனி லோக்! | Makkal Osai

LRT3 திட்ட சர்ச்சை: சிலாங்கூர் சுல்தானைச் சந்திக்க அனுமதி கோரும் அந்தோனி லோக்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin