• Login
Monday, November 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அபுதாபியில் சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி நாளை தொடங்குகிறது… | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 2, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
அபுதாபியில் சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி நாளை தொடங்குகிறது… | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அபுதாபி, அபுதாபியில் சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நாளை தொடங்குகிறது. இதில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் மந்திரிகள் பங்கேற்கின்றனர்.

அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் நடைபெறும் இந்த விழாவில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட 30 நாடுகள் தங்களது பிரத்யேக அரங்குகளை அமைக்கின்றன. எரிசக்தி துறையில் தடம் பதித்து வரும் உலகளாவிய 2,260 நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன.

சர்வதேச வல்லுநர்கள்
இந்த நிகழ்வை நேரில் பார்வையிட 170-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 2 லட்சத்து 39 ஆயிரத்திற்கும் அதிகமான சர்வதேச வல்லுநர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கண்காட்சியை நடத்தும் நிறுவனத்தின் தலைவர் கிறிஸ்டோபர் ஹட்சன் கூறியதாவது:-

தொழில்நுட்ப துறை மந்திரி உரை
“இந்த கண்காட்சியையொட்டி நடக்கும் கருத்தரங்கில் உலகத்தரம் வாய்ந்த எரிசக்தி வல்லுநர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர். தொடக்க விழாவில் அமீரக தொழில் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப துறை மந்திரி சுல்தான் பின் அகமது சுல்தான் அல் ஜாபர் முக்கிய உரையாற்றுகிறார்.”

பலத்த பாதுகாப்பு
அதேபோல் அமீரக எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு துறை மந்திரி சுகைல் பின் முகம்மது அல் மஸ்ரூயி மற்றும் 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் மந்திரிகள், சர்வதேச எண்ணெய் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகின்றனர். எதிர்காலத் திட்டம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான முக்கிய விவாதங்களும் அரங்கேறுகின்றன.

5-ந் தேதி நிறைவு
உலக தலைவர்கள் மற்றும் முக்கிய விஐபிக்கள் அபுதாபியில் குவிந்து வருவதால், போலீசார் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். மொத்தம் 4 நாட்கள் நடைபெறும் இந்த சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி வருகிற 5-ந் தேதி நிறைவடைகிறது.



Read More

Previous Post

“We’re Out of Time”: Pilot’s Last Words Before Jet Crashes in Florida | We’re Out Of Time: புளோரிடாவில் ஜெட் விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன் பைலட்டின் இறுதி வார்த்தை

Next Post

dollar exachange rate

Next Post
dollar exachange rate

dollar exachange rate

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin