• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

அபிஷேக் சர்மாவின் வெற்றிக்கு யுவராஜ் சிங் முக்கிய காரணம்

GenevaTimes by GenevaTimes
February 6, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
அபிஷேக் சர்மாவின் வெற்றிக்கு யுவராஜ் சிங் முக்கிய காரணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 06, 2025 4:31 PM IST

அபிஷேக் சர்மாவின் தந்தை ராஜ்குமார், யுவராஜ் சிங் தனது மகனின் திறமையான ஆட்டத்திற்கு முக்கிய காரணம் என உணர்ச்சிவசப்பட்டு தெரிவித்தார். யுவராஜ் சிங், அபிஷேக்கை சர்வதேச அளவில் சாதிக்க பயிற்சி அளித்தார்.

அபிஷேக் சர்மா, அவரது தந்தையுடன் யுவராஜ் சிங்அபிஷேக் சர்மா, அவரது தந்தையுடன் யுவராஜ் சிங்
அபிஷேக் சர்மா, அவரது தந்தையுடன் யுவராஜ் சிங்

எங்கள் வாழ்வில் கடவுளைப் போல யுவராஜ் சிங் வந்துள்ளார் என அபிஷேக் சர்மாவின் தந்தை உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி வீரரான அபிஷேக் சர்மா, ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடியபோது தனது திறமையால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இதன் காரணமாக இந்திய அணியில் இடம் பிடித்த அவர், இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் வெறும் 54 பந்துகளில் 135 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த அபாரமான பேட்டிங்குக்கு முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் அளித்த பயிற்சியே முக்கிய காரணம் என அபிஷேக்கின் தந்தை ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “என் மகனுக்கு 12 வயதில் இருந்தே கிரிக்கெட்டில் தனித்துவமான திறமை இருந்தது. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அவன் விளையாடியபோது, நான் டிவியில் தான் பார்த்தேன். அவனது ஆட்டத்தைப் பார்த்து எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. இந்தியாவுக்காக என் மகன் சிறப்பாக விளையாடுவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

“போட்டி முடிந்த பின்னர் அபிஷேக்கை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். எப்போதுமே அணிக்கு முன்னுரிமை கொடுத்து விளையாட வேண்டும் என்றும் அறிவுறுத்தினேன். என் மகனின் திறமையான ஆட்டத்திற்கு யுவராஜ் சிங் தான் முக்கிய காரணம். அவர் எங்கள் வாழ்க்கையில் கடவுளைப் போல வந்தார்” என உணர்ச்சிவசப்பட்டார்.

இதையும் படிங்க – பாட் கம்மின்ஸ் உள்பட 4 பேர் விலகல்.. சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தடுமாறும் ஆஸ்திரேலிய அணி

“யுவராஜ் சிங்கின் வழிகாட்டுதலால் தான் என் மகன் இவ்வளவு சிறப்பாக விளையாடுகிறார். கொரோனா காலத்தில் சுமார் நான்கு மாதங்கள் யுவராஜ் சிங்கிடம் என் மகன் பயிற்சி பெற்றார். சர்வதேச அளவில் சாதிக்கத் தேவையான அனைத்து நுணுக்கங்களையும் இரவு பகலாக பயிற்சி அளித்து, திறமையான வீரராக அபிஷேக்கை யுவராஜ் சிங் மாற்றியுள்ளார்” எனப் பெருமையுடன் தெரிவித்தார்.

First Published :

February 06, 2025 4:31 PM IST

Read More

Previous Post

இருளில் நாட்டின் எதிர்காலம்: மோடி உரையை விமர்சித்த கார்கே!

Next Post

தலைசுற்ற வைக்கும் தங்கம் விலை.. 2025ல் மட்டும் இவ்வளவு உயரப் போகுதா?

Next Post
தலைசுற்ற வைக்கும் தங்கம் விலை.. 2025ல் மட்டும் இவ்வளவு உயரப் போகுதா?

தலைசுற்ற வைக்கும் தங்கம் விலை.. 2025ல் மட்டும் இவ்வளவு உயரப் போகுதா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin