Last Updated:
இந்தியாவில் குறிப்பிட்ட நிறுவனத்தின் போலி வெறிநாய்க்கடி தடுப்பு மருந்து விற்கப்படுவதாக ஆஸ்திரேலியா கூறியிருந்த நிலையில், அதை இந்திய நிறுவனம் மறுத்துள்ளது.
வெறி நாய்க்கடியால் பாதிக்கப்படுவோர் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு, சில நாட்களில் கொடூர மரணத்தை சந்திக்க வேண்டியிருக்கும். இப்படி நாய் கடித்ததும் ரேபிஸ் ஏற்படுவதைத் தடுக்க, பல்வேறு நிறுவனங்கள் தடுப்பூசி மருந்துகளை விற்பனை செய்து வருகின்றன. அப்படி 2023 நவம்பர் தேதியிட்ட பேட்ச்சில் தயாரான மருந்துதான் அபய்ராப் (Abhayrab).

இது தொடர்பாக அளிக்கப்பட்ட விளக்கத்தில் 2024 மார்ச்சில் தயாரான குறிப்பிட்ட பேட்ச் மருந்துகளில் மட்டுமே பேக்கிங் குறைபாடு காணப்பட்டதாகவும், அது 2025 ஜனவரியில் தங்கள் கவனத்திற்கு வந்ததுமே சந்தையில் இருந்து முழுவதுமாக அகற்றப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குறைபாடு கண்டறியப்பட்டதும் உடனடியாக சுகாதார அமைச்சகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, முறைப்படி புகார் அளிக்கப்பட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தயாராகும் அனைத்து தடுப்பூசிகளும் ஒவ்வொரு பேட்ச் வாரியாக மத்திய மருந்துப்பொருள் ஆய்வகம், ஆய்வு செய்தபிறகே சந்தைக்கு வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
December 28, 2025 1:03 PM IST


