எத்தனை தடைகள் வந்தாலும் அதையெல்லாம் உடைத்தெறிந்து, இந்தியா முழுவதும் பல கிளைகளோடு செயல்படக் கூடிய நோய் கண்டறிதல் மற்றும் தடுப்பு ஆய்வகமான தைரோகேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் அதன் நிறுவனரும் தலைவருமான வேலுமணி.
அவரது வெற்றிப் பயணம் சாதாரணமானது அல்ல. அர்ப்பணிப்பு, கடுமையான உழைப்பு, மன உறுதி, தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வது போன்றவற்றால் தான் இவ்வுளவு உயர்ந்த இடத்தை அடைந்துள்ளார் வேலுமணி. தங்கள் லட்சியத்தை அடைய எத்தனை தடைகள் வந்தாலும் அதை எதிர்த்து போராட வேண்டும் என நினைப்பவர்களுக்கு உத்வேகம் தரக்கூடியது இவருடைய வாழ்க்கை கதை.
குறைவான முதலீட்டில் தொழிலை தொடங்கி தனது விடாமுயற்சியாலும் புத்தி சாதூர்யத்தாலும் உழைப்பாலும் இன்று பில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவனமாக உயர்த்தியுள்ளார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த வேலுமணியின் தந்தை நிலமில்லா கூலி விவசாயி ஆவார். வேலுமணியும் அவரது சகோதரர்களும் போட்டுக்கொள்ள கூட நல்ல உடை, செருப்பு வாங்க முடியாத நிலையில் தான் அன்று அவர்களது குடும்பம் இருந்தது. இப்படி வறுமைக்கு இடையே வாழ்ந்து பழகியதால் சிறுவயதிலேயே எதையும் தாங்கும் போராட்ட குணம் வேலுமணியின் மனதிற்குள் குடிகொண்டது.
கல்லூரியில் வேதியல் மற்றும் பயோகெமிஸ்ட்ரியில் பட்டப்படிப்பை முடித்த வேலுமணி, தைராய்டு பிசியாலஜியில் டாக்டரேட் பட்டம் பெற்றுள்ளார். ஆய்வக தொழில் தொடங்குவதற்கு இந்தப் படிப்புகள் அவருக்கு பலமான அடித்தளமாக இருந்தது. தைரோகேர் நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பு மும்பையில் உள்ள பொதுத்துறை நிறுவனமான BARC-ல் 15 ஆண்டுகள் பணியாற்றிய அணுபவமும் வேலுமணிக்கு உள்ளது. இத்துறையில் உள்ள நிபுணத்துவம் காரணமாக Nueclear Healthcare நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராகவும் சில காலம் பணியாற்றியுள்ளார். இங்கு புற்றுநோயை கண்டறிந்து கண்காணிக்கும் மேம்படுத்தப்பட்ட ரேடியோலஜி தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி வந்தார்.
இதையும் படிங்க:
ரூ.1,01,406 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை நிர்வகிக்கும் இளம் பெண் சிஇஓ… யார் இந்த ராதிகா குப்தா?
இவ்வுளவு வெற்றிக்குப் பிறகும், ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்து ரூ.1,400 கோடி வரை நஷ்டம் அடைந்துள்ளார் வேலுமணி. அனுபவம் வாய்ந்த தொழில் அதிபர்கள் கூட முதலீட்டில் பெரும் நஷ்டம் அடைகிறார்கள் என்பதை இது நமக்கு நியாபகப்படுத்துகிறது. ஆனால் இவர் தான் செய்த தவறுகளையும் அதில் கிடைத்த அணுபவங்களையும் மக்களிடம் வெளிப்படையாக பகிர்ந்துகொள்கிறார். தோல்வியிலிருந்து கிடைத்த பாடத்தை கற்றுக்கொண்டு எதிர்காலத்தில் இதுபோல் தவறுகள் நடக்காதவண்ணம் தன்னை மெருகேற்றி கொள்கிறார். இதை நாம் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஏப்ரல் மாத நிலவரப்படி Thyrocare Technologies நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.3,300 கோடியாகும். இதில் வேலுமணியின் தலைமைப் பண்பிற்கும் தொலைநோக்கு பார்வைக்கு கணிசமான பங்கிருக்கிறது. புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ள அனைவருக்குமே வேலுமணியின் வாழ்க்கை உத்வேகம் தரக்கூடியது. விடாமுயற்சியும் நிலைத்தன்மையும் இருந்தால் எத்தனை தடைகள் வந்தாலும் வாழ்க்கையில் சதிக்கலாம் என்பதற்கு மிகப்பெரிய உதாரணமாக திகழ்கிறார் வேலுமணி.
.
&w=750&resize=750,375&ssl=1)
