• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அன்று கேப் டிரைவர்.. இன்று பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரர்.. சிரமங்களை கடந்து சாதித்த மணி சிங்! | வணிகம்

GenevaTimes by GenevaTimes
October 29, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
அன்று கேப் டிரைவர்.. இன்று பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரர்.. சிரமங்களை கடந்து சாதித்த மணி சிங்! | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 29, 2025 4:39 PM IST

10 வருடங்களுக்கு மேலாக கேப் டிரைவராகப் பணிபுரிந்து கொண்டிருந்த அவர் பின்னர் 5 கேப்களைச் சொந்தமாக வாங்கி, அதனைப் பயன்படுத்தி அவர் டிரைவர்களின் நெட்வொர்க் ஒன்றை உருவாக்கினார்.

சிரமங்களை கடந்து சாதித்த மணி சிங்!
சிரமங்களை கடந்து சாதித்த மணி சிங்!

தலையெழுத்து, விடாமுயற்சி மற்றும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் பலனாக மனச்சோர்வு நிறைந்த ஒரு ஆளாக இருந்த மணி சிங் தற்போது பல்வேறு பிசினஸ்களுக்குச் சொந்தக்காரராக மாறியுள்ளார். 2006 ஆம் ஆண்டில் அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற தன்னுடைய கனவைப் பூர்த்தி செய்வதற்காகப் பஞ்சாபில் இருந்து மணி சிங் அமெரிக்கா சென்றார். ஆரம்ப நாட்களில் அவர் சான் ஃபிரான்சிஸ்கோவில் தங்கி இருந்தபோது, அந்தப் புதுச் சூழலுக்கு ஏற்றவாறு தன்னைத் தகவமைத்துக் கொள்வதில் பல்வேறு சிரமங்களை அனுபவித்தார்.

தனிமை மற்றும் நம்பிக்கையின்மை அவரை வாட்டி வதைத்தது. CNBC-க்குக் கொடுத்த ஒரு இன்டர்வியூவில் அவர் கூறியிருப்பதாவது, “நான் ஒரு வருடமாகக் கடுமையான மனச்சோர்வை அனுபவித்து வந்தேன். மீண்டும் இந்தியாவிற்கே திரும்பிவிடலாம் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. சமூகத்தில் நான் தனியாக இருப்பது போல உணர்ந்தேன்” என்று கூறியிருந்தார். கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியதால் இந்தியாவில் தான் படித்த கல்வியை அமெரிக்காவில் இருந்த கல்வி நிறுவனங்களுக்கு அவரால் மாற்ற இயலவில்லை. இதனால் மனமுடைந்து தன்னுடைய அம்மாவின் ஆலோசனையைக் கேட்கலாம் என்று முடிவு செய்து, இந்தச் சிரமங்களைச் சமாளிப்பதற்கு ஏதாவது வேலை பார்க்கலாம் என்று முடிவு செய்தார்.

இதனால் ஆரம்பத்தில் ஒரு லோக்கல் மருந்து கடையில் வேலைக்குச் சேர்ந்தார். அதன் பிறகு தன்னுடைய மாமாவின் கேப் நிறுவனத்தில் சேர்ந்தார். இதுவரை அவருடைய சம்பளம் ஒரு கேப் டிரைவராக ஒரு மணி நேரத்திற்கு 6 அமெரிக்க டாலர்கள் தான். ஆனால் ஒரு திறப்பு முனையாக அவர் தன்னுடைய பிசினஸ்கள் மூலமாக மில்லியன் கணக்குகளில் டாலர்களைச் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார். 10 வருடங்களுக்கு மேலாக கேப் டிரைவராகப் பணிபுரிந்து கொண்டிருந்த அவர் பின்னர் 5 கேப்களைச் சொந்தமாக வாங்கி, அதனைப் பயன்படுத்தி அவர் டிரைவர்களின் நெட்வொர்க் ஒன்றை உருவாக்கினார்.

இதையும் படிங்க: Gold Price Fall | நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை இன்னும் எவ்வளவு குறையும்? வெளியான தகவல்!

இதன் மூலமாகத் தனித்துச் செயல்படும் டிரைவர்களுக்கான மார்க்கெட்டிங் மற்றும் விளம்பர தளம் ஒன்றை அமைத்தார். அதற்கு “ATCS பிளாட்ஃபார்ம் சொல்யூஷன்ஸ்” என்று பெயரிட்டார். எனினும் 2019ஆம் ஆண்டில் தன்னுடைய தொழிலை விரிவாக்கம் செய்ய மணி சிங் முடிவு செய்தார். மேலும் மௌண்டைன் வியூவில் Dandies Barbershop & Beard Stylist என்ற முடி திருத்தம் செய்யும் கடையைத் திறந்தார். இது ஒரு மிகப்பெரிய ரிஸ்க்காக இருந்தாலும் அதற்கான சன்மானத்தைப் பெறத்தான் செய்தார்.

CNBC-ல் வெளியிட்ட அறிக்கையின் படி, இந்த பார்பர் ஷாப் மூலமாக மட்டுமே 2024 ஆம் ஆண்டில் 1.07 மில்லியன் அமெரிக்க டாலர்களை அவர் சம்பாதித்து இருக்கிறார். மேலும் ATCS பிளாட்ஃபார்ம் மூலமாக 1.18 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருமானமாகப் பெற்றிருக்கிறார். இந்த இரண்டு பிசினஸ்களில் இருந்தும் மில்லியன் கணக்கில் பணம் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

October 29, 2025 4:39 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

அன்று கேப் டிரைவர்.. இன்று பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரர்.. சிரமங்களை கடந்து சாதித்த மணி சிங்!

Read More

Previous Post

ஒருநாள் போட்டி தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முதலிடம் | Women ODI ranking: Smriti Mandhana solidifies No 1 status

Next Post

பணியில் இருக்கும் இளம்பெண்ணை மிரட்டிப் பணம் பறித்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக மூவர் மீது காவல்துறையினர் விசாரணை – Malaysiakini

Next Post
பணியில் இருக்கும் இளம்பெண்ணை மிரட்டிப் பணம் பறித்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக மூவர் மீது காவல்துறையினர் விசாரணை – Malaysiakini

பணியில் இருக்கும் இளம்பெண்ணை மிரட்டிப் பணம் பறித்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக மூவர் மீது காவல்துறையினர் விசாரணை – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin