• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அன்று ஆட்டோ ஓட்டுனர்; இன்று ரூ.800 கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் உரிமையாளர்; யார் இந்த சாதனை மனிதர்?

GenevaTimes by GenevaTimes
June 18, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
அன்று ஆட்டோ ஓட்டுனர்; இன்று ரூ.800 கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் உரிமையாளர்; யார் இந்த சாதனை மனிதர்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எளிமையான குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்து, போட்டி நிறைந்த இந்திய குளிர்பான துறையில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இதற்கு கடுமையான உழைப்பு, விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, தொலைநோக்கு பார்வை ஆகியவை தேவைப்படும்.

இவை அனைத்தும் இருந்தால் மட்டுமே இத்துறையில் நினைத்த வெற்றியை பெற முடியும். சத்யா சங்கரின் வாழ்க்கை கதை தொழில் தொடங்க ஆர்வமுள்ள பல இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. பல தடைகள் வந்தபோதும் அதையெல்லாம் மீறி தன்னுடைய கடினமான உழைப்பால் உலகிலுள்ள மிகப்பெரிய நிறுவனங்களுக்கெல்லாம் சவால் அளிக்கும் பிராண்டை உருவாக்கியுள்ளார்.

விளம்பரம்

கர்நாடகாவில் உள்ள பெல்லாரே கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் சங்கர். தன்னுடைய சிறு வயதில் பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார் சங்கர். ஆரம்பத்தில் தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக வங்கியில் கடன் வாங்கி சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். தன்னுடைய அசாத்தியமான உழைப்பால் ஒரு வருடத்திலேயே வங்கியில் வாங்கிய கடனை அடைத்தார். பின்னர் அந்த ஆட்டோவை விற்றுவிட்டு அம்பாஸிடர் கார் ஒன்றை வாங்கினார்.

கடுமையாக உழைத்தாலும் டாக்ஸி ஓட்டுனராக இருப்பதில் சங்கருக்கு என்னவோ திருப்தியாக இல்லை. தன்னுடைய கேரியரில் மாற்றம் வேண்டும் என முடிவு செய்த சங்கர், 1987ம் ஆண்டு ஆட்டோமொபைல் கேரேஜ் தொழிலை சொந்தமாக தொடங்கினார். அதன்பின்னர் வாகனங்களுக்கான டயர் டீலர்ஷிப்பை எடுத்ததோடு ஆட்டோமொபைல் நிதி நிறுவனத்தையும் தொடங்கினார். இந்த சமயத்தில் சங்கரின் நிதி நிலைமையும், குடும்ப சூழலும் நன்றாக இருந்தாலும், அவர் மனதிற்குள் ஏதோவொரு நிம்மதியின்மை இருந்துகொண்டே இருந்தது.

விளம்பரம்

இதையும் படிக்க:
FD திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மாற்றிய முன்னணி வங்கி! முழு விவரம்

2000-ம் ஆண்டின் ஆரம்ப கட்டங்களில் வட இந்தியாவிற்கு பயணம் செய்தபோதுதான் அவரது வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. இந்தப் பயணத்தின்போது குளிர்பானம் சம்மந்தமான தொழில் யோசனை ஒன்று அவருக்கு தோன்றியது. உள்ளூரில் கிடைக்கும் சீரகத்தை பயன்படுத்தி அதன் சுவையில் குளிர்பானம் தயாரித்தால் லாபகரமானதாக இருக்கும் என்றும், இதற்கு சந்தையில் அதிக வரவேற்பு கிடைக்கும் என்றும் நினைத்தார் சங்கர்.

விளம்பரம்

ஆனால் அவருக்கு இந்த தொழிலில் முன் அனுபவம் இல்லை. இருந்தாலும் 2002ம் ஆண்டு Bindu Fizz என்ற பெயரில் சீரக மசாலா பானத் தொழிலை ஆரம்பித்தார். இதன் தனித்துவமான சுவையும் மனதிற்கு புத்துணர்ச்சியூட்டும் தன்மை காரணமாக மக்களிடம் அதிக வரவேற்பு கிடைத்தது. மேலும் தங்கள் குளிர்பானத்தை எளிதாக எடுத்துச் செல்லும்படி இருக்க வேண்டும் என்பதற்காக PEC பாட்டிலில் பேக்கேஜ் செய்து கொடுத்தார் சங்கர்.

ஊட்டி அருகே இப்படி ஒரு நீர்வீழ்ச்சியா… அட்வெஞ்சர் விரும்பிகளுக்கு சூப்பர் ஸ்பாட்.!


ஊட்டி அருகே இப்படி ஒரு நீர்வீழ்ச்சியா… அட்வெஞ்சர் விரும்பிகளுக்கு சூப்பர் ஸ்பாட்.!

2005-06-ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ.6 கோடியை தொட்டது. 2010-ம் ஆண்டில் இவர்களது வருமானம் ரூ.100 கோடியை தாண்டியது. இதற்கிடையில் 2015-ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் Bindu Jeera ஏற்றுமதியானது. 2023-ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ.800 கோடியாகும்.

விளம்பரம்

.

Read More

Previous Post

மூக்கில் பலத்த காயம்: மாஸ்க் அணிந்து விளையாட எம்பாப்பே திட்டம் | Euro Cup | Serious nose injury Mbappe to play wearing mask Euro Cup

Next Post

டீசல் மானிய நடவடிக்கை சிங்கப்பூர் சுற்றுலா பேருந்துகளின் விலை உயர்வுமூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது – Malaysiakini

Next Post
டீசல் மானிய நடவடிக்கை சிங்கப்பூர் சுற்றுலா பேருந்துகளின் விலை உயர்வுமூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது – Malaysiakini

டீசல் மானிய நடவடிக்கை சிங்கப்பூர் சுற்றுலா பேருந்துகளின் விலை உயர்வுமூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin