சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் தண்டனையை உடனடியாக இரத்து செய்து, அவரை விடுதலை செய்யக் கோரி யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையில் உணர்வுபூர்வமான கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று மாலை(21) இடம்பெற்றது.
இப்போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரும் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, அனோஜனின் விடுதலைக்காகத் தொடர்ச்சியாகத் தங்களது கவனயீர்ப்பினை வெளிப்படுத்தினர்.
அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும், அவருக்கு முழுமையான மன்னிப்பு வழங்கப்பட்டு தாய்நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற முதன்மைக் கோரிக்கைகளை முன்வைத்து இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

