வாகனம் தவிர்ந்த ஏனைய அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகள் நேற்று (09) முதல் நீக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
2020 மார்ச் மாதம் முதல் விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுள் இவ்வாறு நீக்கப்பட்டுள்ள போதும், வாகனங்கள் மீதான இறக்குமதித் தடைகள் விரைவில் நீக்கப்பட வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

