நாட்டின் ஐந்து ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்துலக மாணவர்கள் உள்ளூர் மாணவர்களை ஓரங்கட்டுகிறார்கள் என்ற கூற்றுகளை உயர்கல்வி அமைச்சகம் நிராகரித்துள்ளது. அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மொத்த மாணவர் எண்ணிக்கையில் அனைத்துலக மாணவர்கள் 21.3% பேர் என்றும், கூறப்படுவது போல் 27% அல்ல என்றும் உயர்கல்வி இயக்குநர் ஜெனரல் அஸ்லிண்டா அஸ்மான் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். முதுகலை மட்டத்தில் அனைத்துலக மாணவர்களின் சதவீதத்தை அமைச்சகம் கட்டுப்படுத்தவில்லை என்றும் அஸ்லிண்டா கூறினார். ஏனெனில் அவர்கள் தங்கள் கலாச்சார மற்றும் கல்வி பின்னணியின் அடிப்படையில் புதிய கண்ணோட்டங்களை வழங்குகிறார்கள், விவாதங்களை வளப்படுத்துகிறார்கள். மேலும் சிக்கல் தீர்க்கும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளை ஊக்குவிக்கிறார்கள்.
அனைத்துலக மாணவர்கள் அரசாங்க மானியங்களிலிருந்து பயனடைவதில்லை என்றும், பல்கலைக்கழகங்கள் அனைத்துலக மாணவர்களின் கட்டணங்களிலிருந்து கிடைக்கும் வருமானத்தை தங்கள் வசதிகளை மேம்படுத்த பயன்படுத்துகின்றன என்றும் அவர் கூறினார் இந்த ஐந்து பல்கலைக்கழகங்களிலும் மொத்த மாணவர் எண்ணிக்கை 180,024 ஆகும். இதில் 141,636 பேர் உள்ளூர் மாணவர்கள், 38,388 பேர் அல்லது 21.3% பேர் அனைத்துலக மாணவர்களாவர். இந்த எண்ணிக்கையில், 15.8% பேர் முதுகலை மாணவர்கள் மற்றும் மீதமுள்ள 5.5% பேர் இளங்கலை மாணவர்கள் என்று அஸ்லிண்டா கூறினார்
ஐந்து பல்கலைக்கழகங்களும் மலாயா பல்கலைக்கழகம், மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம், கெபாங்சான் மலேசியா பல்கலைக்கழகம், புத்ரா மலேசியா பல்கலைக்கழகம், மலேசியா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகும். வியாழக்கிழமை, கெடா நிர்வாக கவுன்சிலர் ஒருவர் மலேசியாவின் ஐந்து முன்னணி பொதுப் பல்கலைக்கழகங்களில் 27% மாணவர்கள் வெளிநாட்டினர் என்று கூறினார்.
உயர்கல்வி அமைச்சகத்தின் தரவுகள், ஐந்து பல்கலைக்கழகங்களில் சேர்ந்த சுமார் 180,000 மாணவர்களில் சுமார் 38,000 அல்லது 27% பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்று தி ஸ்டாரில் ஒரு அறிக்கையில், ஹைம் ஹில்மான் அப்துல்லா கூறினார். இந்த பல்கலைக்கழகங்கள் வரி செலுத்துவோரால் நிதியளிக்கப்படுகின்றன. மேலும் எங்கள் பேராசிரியர்கள் பொதுமக்களின் பணத்தில் செலுத்தப்படுகிறது. இருப்பினும் பயனடைபவர்களில் 37% பேர் மலேசியர்கள் அல்ல என்று அவர் கெடா மாநில சட்டமன்றத்தில் கூறினார். ஜித்ரா சட்டமன்ற உறுப்பினர் கெடாவின் முதலீடு, உயர்கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைக் குழுவின் தலைவராகவும் உள்ளார்.




