• Login
Thursday, February 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அனைத்துலக போலி விசா கும்பல் முறியடிப்பு: வங்காளதேச தம்பதிக்கு RM112,000 அபராதம்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 25, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
அனைத்துலக போலி விசா கும்பல் முறியடிப்பு: வங்காளதேச தம்பதிக்கு RM112,000 அபராதம்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர், பிப்ரவரி 26, 2026:

‘டேவிட் லாரன்ஸ்’ (David Lawrence) என்று அழைக்கப்படும் அனைத்துலக போலி விசா கும்பலை மலேசிய குடிநுழைவுத் துறை வெற்றிகரமாக முறியடித்துள்ளது. மூன்று மாத கால தீவிரக் கண்காணிப்பிற்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதற்கான போலி அனைத்துலக விசாக்களைத் தயாரித்து வழங்க இந்த கும்பல் ஒரு ஆவணத்திற்கு RM20,000 வரை கட்டணம் வசூலித்துள்ளது என்று, குடிநுழைவுத் துறையின் கோலாலம்பூர் துணை இயக்குநர் மெரினா ஹபிபோன் கூறினார்.

வங்காளதேசத்தில் உள்ள வாடிக்கையாளர்களின் பாஸ்போர்ட்டுகள் அனைத்துலக கூரியர் மூலம் மலேசியாவிற்கு அனுப்பப்படுகின்றன. இங்கு அவை போலியாக மாற்றப்பட்டு, மீண்டும் ஐரோப்பியப் பயணத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

பிப்ரவரி 10-ஆம் தேதி சுங்கை பீசி (Sungai Besi) பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், கடந்த எட்டு மாதங்களாக இச்செயலில் ஈடுபட்டு வந்த 30 வயது மதிக்கத்தக்க வங்காளதேச தம்பதி கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து பல வங்காளதேச பாஸ்போர்ட்டுகள், போலி வெளிநாட்டு குடிநுழைவு முத்திரைகள், போலி குடிவரவு சீட்டுகள், மடிக்கணினி மற்றும் விசா தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பிப்ரவரி 23-ஆம் தேதி கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்தத் தம்பதி, அவர்கள் மீதான 9 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டனர்.

நீதிமன்றம் அவர்களுக்கு மொத்தம் RM112,000 அபராதம் விதித்தது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் 45 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தண்டனைக்காலம் முடிந்தவுடன் அவர்கள் இருவரும் நாடு கடத்தப்படுவார்கள் மற்றும் மலேசியாவிற்குள் நுழைய நிரந்தரத் தடை (Blacklisted) விதிக்கப்படும்.

மலேசியாவின் இறையாண்மையைப் பாதுகாக்கும் வகையில், ஆவண மோசடிகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் என மெரினா எச்சரித்துள்ளார்.



Read More

Previous Post

எப்ஸ்டீன் பாணியில் இலங்கையில் அரங்கேறிய கொடூரங்கள்…! மூடிமறைக்கப்பட்ட அதிர்ச்சி தகவல்கள்

Next Post

Tamilmirror Online || பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸ்

Next Post
Tamilmirror Online || பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸ்

Tamilmirror Online || பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin