• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அனைத்துலக ஆயுத இறக்குமதி: இரண்டாம் இடத்தில் இந்தியா, முதலிடத்தில் உக்ரேன் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 30, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
அனைத்துலக ஆயுத இறக்குமதி: இரண்டாம் இடத்தில் இந்தியா, முதலிடத்தில் உக்ரேன் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

புதுடெல்லி:

உலகளாவிய ஆயுத இறக்குமதியில் 8.3 சதவீதத்தை பெற்றுள்ள இந்தியா, பெரிய ஆயுத இறக்குமதியாளர்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதுவரை முதலிடத்தில் இருந்த சவுதி அரேபியாவைப் பின்னுக்குத் தள்ளி, அந்த இடத்தை உக்ரேன் கைப்பற்றியுள்ளது.

சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள அனைத்துலக அமைதி ஆராய்ச்சி நிலையமானது அவ்வப்போது உலக நாடுகளின் ஆயுத விற்பனை, கொள்முதல், ஆயுதக் குறைப்பு நடவடிக்கைகள் தொடர்பான புள்ளி விவரங்கள், அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.

தற்போது கடந்த 2020 முதல் 2024 வரையிலான காலக்கட்டத்தில் ஆயுத இறக்குமதியில் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகள் தொடர்பான விவரங்களை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

அது வெளியிட்ட அறிக்கையில் முதலிடத்தில் உள்ள உக்ரேன் தற்போது ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டுள்ளதால், மற்ற உலக நாடுகளைவிட அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்து வருகிறது.

இரண்டாவது இடம் பிடித்துள்ள இந்தியாவின் ஆயுத இறக்குமதியானது, முந்திய ஐந்து ஆண்டு காலத்தைவிட கடந்த 2020 – 2024 வரையிலான காலக்கட்டத்தில் குறைந்துள்ளது. உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்களைக் கொள்முதல் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது இந்தியா.

மேற்காசிய நாடான கத்தார் மூன்றாவது இடத்திலும் சவுதி அரேபியா நான்காவது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தானுக்கு ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது. ஜப்பான், ஆஸ்திரேலியா, எகிப்து, அமெரிக்கா, குவைத் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இதனிடையே, பஹல்காம் தாக்குதலை அடுத்து, தனது பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில், 231.6 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது என அதன் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

இதற்காக, 13 புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அந்த அமைச்சு மேலும் கூறியது. வான் பாதுகாப்பை உறுதி செய்யவும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையாகவும் புதிய ஆயுதங்களை வாங்க இந்தியா முடிவு செய்திருக்கிறது.

அது வெளியிட்ட அறிக்கையில் முதலிடத்தில் உள்ள உக்ரேன் தற்போது ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டுள்ளதால், மற்ற உலக நாடுகளைவிட அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்து வருகிறது.

இரண்டாவது இடம் பிடித்துள்ள இந்தியாவின் ஆயுத இறக்குமதியானது, முந்திய ஐந்து ஆண்டு காலத்தைவிட கடந்த 2020 – 2024 வரையிலான காலக்கட்டத்தில் குறைந்துள்ளது. உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்களைக் கொள்முதல் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது இந்தியா.

மேற்காசிய நாடான கத்தார் மூன்றாவது இடத்திலும் சவுதி அரேபியா நான்காவது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தானுக்கு ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது. ஜப்பான், ஆஸ்திரேலியா, எகிப்து, அமெரிக்கா, குவைத் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இதனிடையே, பஹல்காம் தாக்குதலை அடுத்து, தனது பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில், 231.6 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது என அதன் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. இதற்காக, 13 புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அந்த அமைச்சு மேலும் கூறியது. வான் பாதுகாப்பை உறுதி செய்யவும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையாகவும் புதிய ஆயுதங்களை வாங்க இந்தியா முடிவு செய்திருக்கிறது.

Read More

Previous Post

5 வருட FD: 25 லட்ச முதலீட்டிற்கு SBI vs PNB vs HDFC vs ICICI vs தபால் நிலைய வட்டி விகிதங்கள் ஓர் ஒப்பீடு…!

Next Post

அர்ஜுன் அலோசியஸ் மீது வரி ஏய்ப்பு வழக்குத் தாக்கல்

Next Post
அர்ஜுன் அலோசியஸ் மீது வரி ஏய்ப்பு வழக்குத் தாக்கல்

அர்ஜுன் அலோசியஸ் மீது வரி ஏய்ப்பு வழக்குத் தாக்கல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In