இலங்கை அதிபர் தேர்தல் முடிவின் அடிபடையில் அந்நாட்டின் புதிய அதிபராக அனுர குமார திசநாயக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரின் பதவி ஏற்பு எப்போது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்துமுடிந்த சூழலில், வரலாற்றில் முதல் முறையாக இரண்டாம் விருப்ப வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் இறுதியாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுர குமார திசநாயக்க, 55 விழுக்காடு வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
மொத்தமாக 57 லட்சத்து 40 ஆயிரத்து 179 வாக்குகளை அனுர குமார திசநாயக்க பெற்றுள்ளார். 44 விழுக்காடு வாக்குகளுடன் சஜித் பிரேமதாச இரண்டாம் இடம் பிடித்தார். அவருக்கு 45 லட்சத்து 30 ஆயிரத்து 902 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இதனால் 12 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அனுர வெற்றி பெற்றுள்ளார்.
மூன்றாவது இடத்தை ரணில் விக்ரமசிங்க, நான்காவது இடத்தை நமல் ராஜபக்ச, 5வது இடத்தை அரியநேந்திரன் பாக்கியசெல்வம் பிடித்தனர். இலங்கையின் 9-ஆவது அதிபராக திங்கட்கிழமை காலை 9 மணிக்கு அனுர குமார திசநாயக்க எளிமையான முறையில் பதவியேற்க இருக்கிறார்.
இதையும் படியுங்கள் :
இலங்கை தேர்தல் முடிவுகள் : புதுச்சேரி முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களின் மனநிலை என்ன?
இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள திசநாயக்க, பல நூற்றாண்டுகளாக நாம் வளர்த்து வந்த கனவு இறுதியாக நனவாகி உள்ளதாகவும், இந்த வெற்றி நம் அனைவருக்கும் சொந்தமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
