Last Updated:
இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது (UIDAI) உங்களுடைய ஆதார் சரிபார்க்கும் செயல்முறைக்காக எங்கு, எப்போது பயன்படுத்தப்பட்டது என்பதைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு எளிமையான வழியை வழங்குகிறது.
ஒரு வங்கிக் கணக்கை திறப்பதில் இருந்து, அரசு மானியங்களைப் பெறுவதுவரை உங்களுடைய ஆதார் நம்பர் என்பது பல்வேறு விஷயங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், உங்களுடைய அனுமதி இல்லாமல் அது பயன்படுத்தப்பட்டால் என்ன ஆகும்? எனவே, உங்களுடைய ஆதார் குறித்த கட்டுப்பாட்டைப் பெறுவதற்கும், விழிப்புணர்வோடு இருப்பதற்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது (UIDAI) உங்களுடைய ஆதார் சரிபார்க்கும் செயல்முறைக்காக எங்கு, எப்போது பயன்படுத்தப்பட்டது என்பதைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு எளிமையான வழியை வழங்குகிறது. இதன் மூலமாக உங்களுடைய அனுமதி இல்லாமல் அல்லது உங்களுக்குத் தெரியாமல் ஆதார் நம்பரைப் பயன்படுத்தினால் உடனடியாக அதனை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
அது பயோமெட்ரிக், OTP அல்லது இருப்பிடம் சார்ந்த சரிபார்ப்பு முறை என்று எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு முறை உங்களுடைய ஆதார் எண் பயன்படுத்தப்படும்போது ஒரு பதிவேடு உருவாக்கப்படுகிறது. இதனை நீங்கள் எங்கு, எப்போது வெப்சைட்டில் இருந்து நேரடியாகப் பார்க்கலாம். அவ்வப்போது இதனைத் தெரிந்துகொள்வது உங்களுடைய ஆதார் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிந்துகொண்டு, விழிப்போடு செயல்படுவதற்கு உதவும்.
உங்களுடைய ஆதார் சரிபார்ப்பு வரலாற்றைத் தெரிந்துகொள்வது எப்படி?
- முதலில் UIDAI வெப்சைட்டிற்குச் சென்று அதில் ‘மை ஆதார்’ டேபின் கீழ் காணப்படும் ‘ஆதார் ஆதன்டிகேஷன் ஹிஸ்டரி சர்வீஸ்’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
- இப்போது உங்களுடைய 12 இலக்க ஆதார் நம்பரை டைப் செய்துவிட்டு, கொடுக்கப்பட்டுள்ள கேப்சா குறியீட்டை என்டர் செய்யவும்.
- பிறகு OTP பெறுவதற்கான கோரிக்கையை கிளிக் செய்யவும்.
- பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் பெறப்பட்ட OTP-ஐ என்டர் செய்த பிறகு கடந்த 6 மாதங்களில் உங்களுடைய ஆதார் மூலமாக செய்யப்பட்ட அனைத்து சரிபார்ப்பு கோரிக்கைகளின் பட்டியலைக் காண்பீர்கள்.
- அதில் தேதி, நேரம், என்ன மாதிரியான சரிபார்ப்பு முறை அதாவது பயோமெட்ரிக் அல்லது OTP மற்றும் கோரிக்கை விடுத்த ஏஜென்சியின் பெயர் போன்ற விவரங்கள் அடங்கி இருக்கும்.
அந்த சமயத்தில் என்ன விவரங்கள் பகிரப்பட்டது என்பதை உங்களால் தெரிந்துகொள்ள முடியாமல் போனாலும் உங்களுடைய ஆதார் நம்பர் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது மற்றும் யார் அதனைப் பயன்படுத்தியது என்ற விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுக்குத் தெரியாமல் அப்படியே ஏதேனும் சரிபார்ப்பு செயல்முறை நடைபெற்றிருந்தால் UIDAI அல்லது சம்பந்தப்பட்ட சேவை வழங்குனருக்குப் புகார் ஒன்றை பதிவு செய்யலாம்.
ஆதார் நம்பர் என்பது வங்கிக் கணக்குகள், மொபைல் நம்பர்கள் மற்றும் பள்ளி சேர்க்கைகளோடு கூட இணைக்கப்பட்டுள்ளது. எனவே, அவ்வப்போது உங்களுடைய தரவுகளை கண்காணிப்பது என்பது மிகவும் அவசியம். இந்த எளிமையான கருவியைப் பயன்படுத்தி உங்களுடைய ஆதார் எங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்துகொண்டு அடையாளத் திருட்டு அல்லது உங்களுடைய ஆதார் தவறாகப் பயன்படுத்தப்படுவதை நீங்கள் தடுக்கலாம். இந்த டிஜிட்டல் செயல்முறை எளிமையாகவும், அதே சமயம் இலவசமாகவும் கிடைக்கிறது. இதற்கு எந்தவிதமான ஆவணங்களும் தேவையில்லை.
July 27, 2025 3:34 PM IST
அனுமதியின்றி உங்களுடைய ஆதார் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது…? ஈஸியா கண்டுபிடிக்க வழி இதுதான்…!


