இந்திய ஸ்டேட் வங்கியில் அனில் அம்பானி செய்த முறைகேடுகளால் ரூ.2,000 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து ஸ்டேட் வங்கி புகார் அளித்து, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மோசடியானது என கடந்த ஜூன் 13ஆம் தேதி அறிவித்திருந்தது.
அதாவது, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் கணக்கை “மோசடி’ என வகைப்படுத்தி, அதன் முன்னாள் இயக்குநர் அனில் அம்பானி மீது ரிசர்வ் வங்கியில் எஸ்பிஐ புகாரளித்து, அதன்படி, சிபிஐ இதனை விசாரித்து வருகிறது.
வங்கிக் கடன் மோசடி தொடர்பான விசாரணைக்காக புது தில்லியில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகியிருந்தார் அனில் அம்பானி என்பது குறிப்பிடத்தக்கது.

