வங்கதேச போரின்போது தான் பிரதமராக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வங்க போரின்போது தாம் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் வசமுள்ள கர்தார்பூர் குருத்வாராவை மீட்டு இருப்பேன் என பஞ்சாப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார். பஞ்சாபின் பாட்டியாலாவில் தனது முதல் பேரணியில் உரையாற்றிய பிரதமர் மோடி, பஞ்சாப் மற்றும் சீக்கிய சமூகம் தேசியக் கட்டுமான முயற்சிகளில் எப்போதும் முன்னணியில் இருப்பதாக கூறினார்.
மேலும், கர்தார்பூர் குருத்வாராவின் உணர்ச்சிப்பூர்வமான பிரச்னையை பிரதமர் மோடி எழுப்பினார். குருநானக் தேவ் தனது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளை கழித்த சீக்கியர்களின் புனித இடமான கர்தார்பூர் குருத்வாராவை 70 ஆண்டுகளாக தொலைநோக்கியில் மட்டுமே தரிசனம் செய்ய முடிவதாக கூறினார்.
1971-இல் வங்க போரின்போது 90,000க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் இந்திய ராணுவத்தின் முன் சரணடைந்தபோது கர்தார்பூர் குருத்வாராவை திரும்பப் பெற ஒரு வாய்ப்பு கிடைத்ததாகவும், அப்போது தாம் பிரதமராக இருந்திருந்தால், அவர் கர்தார்பூர் குருத்வாராவை அவர்களிடமிருந்து பறித்து பின்னர் அவர்களது படைகளை விடுவித்திருப்பேன் என்றார்.
இதையும் படிங்க : சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை : கேரள முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!
பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானை காகித முதல்வர் என விமர்சித்த பிரதமர் மோடி, அவர் ‘டெல்லி தர்பாரில்’ தனது இருப்பைக் குறிப்பதில் மும்முரமாக இருப்பதாகவும் கூறினார். பஞ்சாப்பில் மணல் கடத்தல், போதைப்பொருள் மாஃபியா மற்றும் துப்பாக்கி கும்பல் ஆட்சி செய்யும்போது அரசாங்கத்தின் ஆணை இங்கு இயங்காது என்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை சாடினார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
