Last Updated:
ஸ்கை டைவர் ஒருவர், மைதானத்தின் ஓரமாக இருந்த பிரமாண்ட ஸ்கோர் போர்டில் மோதியதால் பரபரப்பு.
இலக்கை நோக்கிய நமது பயணம் சரியாக இருந்தாலும், வெற்றிக்கு இதர காரணிகளும் துணை நிற்க வேண்டும் என்பதை எடுத்துக் கூறுவது போல் அமெரிக்காவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் பிளாக்ஸ்பர்க் என்னுமிடத்தில் வசந்த கால கால்பந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வைக் காண நூற்றுக்கணக்கான மாணவர்கள் குவிந்தனர். அதற்கு முன்னதாக சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக ஸ்கை டைவிங் நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
JUST IN: Parachuter slams into the scoreboard at Lane Stadium in Blacksburg, Virginia.
The incident took place before the kickoff for Virginia Tech’s 2026 Spring Football Game.
According to Virginia Tech spokesperson Mark Owczarsk, the parachuter was rescued within… pic.twitter.com/qmnErLbhRC
— Collin Rugg (@CollinRugg) April 18, 2026
அப்போது, மைதானத்தில் குதிப்பதற்காக வந்து கொண்டிருந்த ஸ்கை டைவர் ஒருவர், மைதானத்தின் ஓரமாக இருந்த பிரமாண்ட ஸ்கோர் போர்டில் நேராக மோதினார். அந்தரத்தில் தொங்கியிருந்த அவரை ஏணி மூலம் மீட்டனர். நல்வாய்ப்பாக அந்த ஸ்கை டைவர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.

