Last Updated:
இலங்கை எம்.பி. ராமநாதன் அர்ச்சுனா, அநுரகுமார திஸ்ஸநாயகவிற்கு வாக்களித்தது தமிழர்களின் தவறு என ஆவேசமாக பேசியது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இலங்கையில் அநுரகுமார திஸ்ஸநாயகவின் தேசிய மக்கள் சக்தி முன்னணிக்கு வாக்களித்ததுதான் தமிழர்கள் செய்த வரலாற்றுத் தவறு என்று அந்நாட்டு எம்.பி., ராமநாதன் அர்ச்சுனா ஆவேசமாக பேசிய பேச்சு வைரலாகி வருகிறது.
இலங்கை தமிழ் அரசியல்வாதியான ராமநாதன் அர்ச்சுனா, யாழ்ப்பாணம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். நாடாளுமன்றத்தில் இவர் ஆற்றிய ஆவேசமான உரைகள் சமூக ஊடகங்களில் பரவலான கவனத்தைப் பெற்று வருகின்றன.
அந்த வகையில், தன்னுடைய தேசிய தலைவர் பிரபாகரனை அவமரியாதையாக பேசுவது கவலை அளிப்பதாக நாடாளுமன்றத்தில் அவர் ஆவேசமாக பேசிய காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
ராமநாதன் அர்ச்சுனா பேசியதாவது: “ஆயுதம் ஏந்தி போராடியவர்கள் உயிரை துச்சமாக எண்ணியவர்கள். அவர்கள் தெய்வத்திற்கும் மேலானவர்கள். ஒரு கூட்டம் எந்தன் தேசியத் தலைவரை போராட்டவாதி என்று சொல்வது கவலையாக இருக்கிறது. நீங்கள் ஒரு போராடிய சமூகம், உங்களுடன் ஆயுதம் ஏந்தி 1000 பேர் இருக்கிறார்கள்.
வெட்கமாக இல்லையா, சோறுதான் சாப்பிடுகிறீர்களா என எங்கள் தமிழ் மக்கள் வடக்கு மாகாண மக்கள் பார்த்துகொள்வார்கள். நீங்கள் கடைசியாக சுடப்போவது ராமநாதன் அர்ச்சுனாவை அது எனக்கு நன்றாகவே தெரியும்” இவ்வாறு அவர் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழர்களுக்கும் – இஸ்லாமியர்களுக்கும் இடையே இலங்கை அரசு மோதலை ஏற்படுத்தி வருவதாகவும் ராமநாதன் அர்ச்சுனா குற்றஞ்சாட்டினார்.
November 20, 2025 4:28 PM IST
“அநுரகுமார திஸ்ஸநாயகவிற்கு வாக்களித்ததே தமிழர்கள் செய்த வரலாற்றுத் தவறு” – இலங்கை எம்.பி. ஆவேசம்


