மூதூர் (Mutur) தள வைத்தியசாலையின் தாதியர்கள் அரசின் வரவு – செலவுத் திட்டத்தில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்றைய தினம் (27.02.2025) 12 மணி தொடக்கம் 1.00 மணி வரை சுமார் ஒரு
மணித்தியாளங்கள் இடம்பெற்றுள்ளது.
2025ஆம் ஆண்டு வரவு செலவு திட்டமானது தமக்கு பாதகமாக அமைந்துள்ளதாக தெரிவித்து இவ் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலதிகநேர கொடுப்பனவு
இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண அரச தாதி உத்தியோகத்தர் சங்க தலைவர் எம்.எம்.பைஸாத் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்.

“நாடு பூராக அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தினால் நண்பகல் 12 மணி தொடக்கம் ஒரு மணி வரை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
அந்த வகையில் மூதூர் தள வைத்தியசாலையிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
கவனயீர்ப்பு போராட்டம்
இம்முறை வரவு செலவு திட்டத்தில் அரசாங்கமானது சகல அரச உத்தியோகத்தர்களுக்கும் சம்பளத்தினை அதிகரித்திருக்கிறது.அந்த வகையில் தாதி உத்தியோகத்தர்களுக்கும் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தாதி உத்தியோகத்தர்களுக்கான மேலதிகநேர கொடுப்பனவு , விடுமுறை தின கொடுப்பனவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டதை விட இம்முறை குறைவாக வழங்கப்பட்டமையினாலே நாம் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை
மேற்கொள்கின்றோம்.
அத்தோடு தமது பதவி உயர்வு காலமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.எழுத்து மூலமாக இந்த அரசாங்கத்திடம் எமது சங்கம்
பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்திருந்த போதிலும் அதற்கு உரிய தீர்ப்பு கிடைக்கப்பெறவில்லை.அதனால் தான் போராட்டத்தை முன்னெடுக்கின்றோம்.
எமது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்போம் ” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |





