Last Updated:
அகமதாபாத் விமான விபத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏர் இந்தியா விமான விபத்தில் இருக்கை 11ஏ-வில் பயணித்த விஸ்வாஷ் குமார் ரமேஷ் உயிர்பிழைத்ததை கேட்டபோது தனக்குப் புல்லரித்ததாகத் தெரிவித்தார்.
சில நாட்கள் முன் நடந்த அகமதாபாத் விமான விபத்தில் ஒருவர் மட்டும் உயிர் தப்பினார். ஏர் இந்தியா விமானத்தின் “11A” இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த ரமேஷ் விஸ்வாஸ் குமார் என்பவர் சீட் தனியாக வந்ததால் விமானத்தில் இருந்து குதித்து உயிர் தப்பினார். விமானத்தில் பறந்த அனைவரும் உயிரிழந்த நிலையில், ரமேஷ் விஸ்வாஸ் மட்டும் உயிர் பிழைத்த ஒரே பயணி.
இதற்கிடையே, கடந்த 1998 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து சூரத்தானி நோக்கி சென்ற விமானம் விபத்தில் சிக்கியது. அந்த விமானம், சூரத்தானி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது நிலைதடுமாறி சதுப்பு நிலத்தில் விழுந்தது. இந்த கோர விபத்தில் 101 பேர் உயிரிழந்தனர். அதேநேரம் அந்த விமானத்தில் 11A இருக்கையில் அமர்ந்திருந்த பாடகர் ருவாங்சாக் லோய்ச்சுசாக் (Ruangsak Loychusak) அவசரகால வழி மூலம் கீழே குதித்து உயிர் தப்பினார்.
அகமதாபாத் விமான விபத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏர் இந்தியா விமான விபத்தில் இருக்கை 11ஏ-வில் பயணித்த விஸ்வாஷ் குமார் ரமேஷ் உயிர்பிழைத்ததை கேட்டபோது தனக்குப் புல்லரித்ததாகத் தெரிவித்தார். 1998 இல் தான் பயணித்த விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளாகும் முன் அவசர கால வழி மூலம் கீழே குதித்து உயிர் பிழைத்ததாகவும், அந்த விபத்துக்குப் பிறகு 10 ஆண்டுகள் விமானத்தில் பறப்பதில் சிரமம் இருந்ததாகவும் தெரிவித்தார். தனக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததாகவும், இதனால், பிறருடனும் பேசுவதைத் தவிர்த்து வந்ததாகவும் கூறினார்.
விமானம் விபத்துக்குள்ளான பிறகு சதுப்பு நிலத்தில் இருந்த சத்தம், வாசனை மற்றும் நீரின் சுவையை கூட தன்னால் இன்னும் மறக்க முடியவில்லை என்றும் பாடகர் ருவாங்சாக் லோய்ச்சுசாக் தெரிவித்துள்ளார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
June 15, 2025 8:13 AM IST
அதே சீட்.. அதே அதிசயம்.. 27 ஆண்டுகளுக்கு முன்பும் காப்பாற்றிய 11ஏ – விமான விபத்தில் உயிர் தப்பிய பாடகர்!

