15 ஆண்டுகளாக அதிஷ்ட குலுக்களில் பங்கேற்று வந்த இந்திய ஊழியர் இறுதியாக சுமார் ரூ8.5 கோடியை வென்று அசத்தியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய ஊழியர் ஒருவர் துபாய் டூட்டி ஃப்ரீயின் மில்லினியம் மில்லியனர் டிராவில் பங்கேற்று சுமார் US$1 மில்லியன் பரிசுத் தொகையை வென்றுள்ளார். அந்த குலுக்களின் 500வது வெற்றியாளர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் டோட்டோ (TOTO) லாட்டரியில் S$12.9 மில்லியன் ஜாக்பாட் பரிசை தட்டித் தூக்கிய இருவர்
இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்தவர் வேணுகோபால் முல்லச்சேரி, இவருக்கு 52 வயது ஆகிறது. அஜ்மானில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஐடி ஆதரவு பணியாளராக வேலைபார்க்கும் அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
15 ஆண்டுகளுக்கும் மேலாக துபாய் டூட்டி ஃப்ரீயின் அதிஷ்ட குலுக்கலில் தொடர்ந்து பங்கேற்கும் இவர், துபாய் டூட்டி ஃப்ரீயின் ஃபேஸ்புக் நேரலையில் தனது பெயர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டபோது மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
“துபாய் டியூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லியனர் அதிஷ்ட குலுக்களின் 500வது வெற்றியாளராக நான் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று முல்லச்சேரி கூறினார்.
சிங்கப்பூர் டோட்டோ (TOTO) டிராவில் முதல் ஜாக்பாட் பரிசு S$10 மில்லியன்: ஒரே வெற்றி – லைப் செட்டில்!
மேலும், “என் தலையிலும் தோள்களிலும் இருந்த ஒரு பெரிய சுமை நீங்கியது போல் உணர்கிறேன்,” என்று அவர் ஒரு ஊடக நேர்காணலில் கூறினார்.
முதலில் தனக்கு இருக்கும் கடன்களை அடைத்துவிட்டு குடும்பத்துடன் பயணம் செய்ய இருப்பதாகவும் அவர் சொன்னார்.
தனது அன்புக்குரியவர்களிடம் அதிக நேரம் செலவழிப்பேன் என்று கூறிய முல்லச்சேரி, அமீரகத்தில் தொழில் தொடங்கி அங்கேயே குடும்பத்துடன் செட்டில் ஆக போவதாகவும் குறிப்பிட்டார்.
UAE தனது இதயத்துக்கு நெருக்கமான நாடு என்பதை சுட்டிக்காட்டிய அவர், வேறு எங்கும் என்னால் வாழ்வதை கற்பனை கூட செய்துபார்க்க இயலாது என்றார்.
சிங்கப்பூர் டோட்டோ, 4D-யில் அதிஷ்டத்தை நம்பும் மக்கள்: குறிப்பிட்ட கிளையில் மட்டும் கொட்டும் பரிசு

