• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

அ​திரடியாக விளையாடுவது எப்படி? – மனம் திறக்கும் வைபவ் சூர்யவன்ஷி | Suryavanshi about power hitting

GenevaTimes by GenevaTimes
April 30, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
அ​திரடியாக விளையாடுவது எப்படி? – மனம் திறக்கும் வைபவ் சூர்யவன்ஷி | Suryavanshi about power hitting
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜெய்ப்​பூர்: ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரில் நேற்று முன்​தினம் ஜெய்ப்​பூரில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணியை 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யது ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி. 210 ரன்​கள் இலக்கை துரத்​திய ராஜஸ்​தான் அணி 25 பந்​துகளை மீதம் வைத்து 15.5 ஓவர்​களி​லேயே 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 212 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது.

14 வயதான வைபவ் சூர்​ய​வன்ஷி 38 பந்​துகளில், 11 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் 101 ரன்​களும், யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 40 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 9 பவுண்​டரி​களு​டன் 70 ரன்​களும் விளாசி அணி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்​தனர். இந்த போட்​டி​யில் சதம் விளாசி​யதன் மூலம் சூர்​ய​வன்ஷி பல்​வேறு சாதனை​களை படைத்​தார். போட்டி முடிவடைந்​ததும் அவர் கூறிய​தாவது: முதல் பந்​தில் சிக்​ஸர் விளாசுவது என்​பது எனக்கு சாதாரண விஷ​யம். நான் இந்​தி​யா​வுக்​காக 19 வயதுக்​குட்​பட்ட அணிக்​காக விளை​யாடி​யுள்​ளேன், மேலும் உள்​ளூர் அளவிலும் விளை​யாடி​யுள்​ளேன், அங்கு நான் முதல் பந்​தில் சிக்​ஸர்​களை அடித்​துள்​ளேன். முதல் 10 பந்​துகளை விளை​யாடும் போது நான் அழுத்​தத்​துக்கு உள்​ளானது இல்​லை. என்னை நோக்கி வரும் பந்​துகளை அடிக்க வேண்​டும் என்ற மனநிலை​யில் தெளி​வாக இருப்​பேன். நான் பந்துவீச்சாளரின் பெயரை அதிகம் பார்க்கவில்லை, பந்தைப் பார்த்து விளையாடுகிறேன். ஐபிஎல்லில் எனது முதல் சதம், அதுவும் 3-வது இன்னிங்ஸில் வந்துள்ளது. இது சிறப்பான உணர்வை கொடுக்கிறது.

யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து பேட்டிங் செய்வதை நான் ரசிக்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்று என்னிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறார். இது எனக்கு உதவுகிறது. கடின​மாக உழைப்​பவர்​கள் ஒரு​போதும் தோல்​வியடை​யாமல் இருப்​பதை கடவுள் உறுதி செய்​கிறார். தற்​போது களத்​தில் பார்க்​கும் செயல் திறன்​களுக்​கும், நான் அடை​யும் வெற்​றிக்​கும் எனது பெற்​றோர் தான் காரணம். இந்த தருணத்​திற்​காக நீண்ட கால​மாக தயா​ராகி வந்​தேன், நான் விரும்​பிய வழி​யில் அது நிகழ்ந்​த​தில் மகிழ்ச்​சி​யடைகிறேன். ராஜஸ்​தான் அணிக்​கான வீரர்​கள் தேர்வு சோதனை​யில், நான் நன்​றாக பேட்​டிங் செய்​தேன். அப்​போது பேட்​டிங் பயிற்​சி​யாளர் விக்​ரம் ரத்​தோர், அணி மேலா​ளர் ரோமி பிந்​தர் ஆகியோர் ஏலத்​தின் போது அணி​யில் எடுக்க முயற்​சிப்​போம் என்று கூறினர்.

அவர்​கள் என்னை தலைமை பயிற்​சி​யாளர் ராகுல் திரா​விட்​டிடம் அறி​முகப்​படுத்​தினர். அவரிடம் பயிற்சி பெற வேண்​டும் என்ற என்​னுடைய கனவு நிறைவேறியது. உதவி பயிற்​சி​யாளர்​களும் மூத்த வீரர்​களும் எனக்குஆதரவு கொடுத்​தனர். என்​னால் சிறப்​பாக செயல்பட முடி​யும் என்ற நம்​பிக்​கையை அவர்​கள் தரு​கிறார்​கள்.

அணிக்​காக என்​னால் ஆட்​டத்தை வென்று கொடுக்க முடி​யும் என்று அவர்​கள் என்​னிடம் கூறுகிறார்​கள். அடுத்து என்ன நடக்​கும் என்ற அழுத்​தம் இல்​லை. நான் இந்​திய அணிக்​காக பங்​களிக்க விரும்​பு​கிறேன், அதற்​காக கடின​மாக உழைக்க வேண்​டும். அந்த நிலையை அடை​யும் வரை என்​னால் கடின​மாக உழைப்​பதை நிறுத்த முடி​யாது. நாட்​டுக்​காக சிறப்​பாக விளை​யாட முயற்​சிப்​பேன்​. இவ்​வாறு வைபவ்​ சூர்​யவன்​ஷி கூறினார்.



Read More

Previous Post

’அதிமுக-பாஜக கூட்டணியில் டிடிவி, சசிகலா?’ டெல்லியில் அமித்ஷா உடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை!

Next Post

அட்சய திரு​தியை: இன்று நகை கடைகளில் சிறப்பு விற்பனைக்கு ஏற்பாடு – சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்க திட்டம் | Jewellery stores are having a special sale today for Akshaya Tritiya

Next Post
அட்சய திரு​தியை: இன்று நகை கடைகளில் சிறப்பு விற்பனைக்கு ஏற்பாடு – சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்க திட்டம் | Jewellery stores are having a special sale today for Akshaya Tritiya

அட்சய திரு​தியை: இன்று நகை கடைகளில் சிறப்பு விற்பனைக்கு ஏற்பாடு - சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்க திட்டம் | Jewellery stores are having a special sale today for Akshaya Tritiya

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin