Last Updated:
வீட்டு உபயோக பொருட்களின் ஜிஎஸ்டியை 12% இருந்து 5% ஆக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
டூத் பேஸ்ட், காலணி, ரெடிமேட் ஆடைகள், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களின் ஜிஎஸ்டியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் 4 அளவுகளில் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. அதாவது, 5, 12, 18 மற்றும் 28 விழுக்காடு என்ற வகையில் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில், 12 விழுக்காடு என்ற வகையை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதன் கீழ் வரும் பொருட்களுக்கான வரியை 5 விழுக்காடாக குறைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, டூத் பேஸ்ட், காலணி, ரெடிமேட் ஆடைகள், வாஷிங் மெஷின் மீதான வரி குறைக்கப்பட வாய்ப்புள்ளது. குக்கர், குடை, தையல் இயந்திரம், வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டியும் 12 விழுக்காட்டில் இருந்து 5 சதவிகிதத்திற்கு குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம், பெருவாரியான வீட்டு உபயோகப் பொருட்களின் விலை குறையும் என கூறப்படுகிறது. இம்மாதத்தில் நடைபெற உள்ள 52 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
July 03, 2025 8:39 AM IST