இதுகுறித்து பேசிய நகை வியாபாரிகள், பொங்கலுக்குப் பிறகு தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை வேகமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தனர். தங்கத்தின் விலை குறையாத நிலையில், மக்கள் 18 கேரட், 16 கேரட் போன்ற குறைந்த கேரட் தங்க நகைகளை வாங்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினர். இவ்வகை தங்கத்தை அரசு மற்றும் பொதுமக்கள் அங்கீகரிக்க வேண்டும் என்றும், வங்கிகளில் அடகு வைக்கும் வசதிக்காக அரசு புதிய சட்டங்களை கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தங்க விலை உயர்வை தனிப்பட்ட முறையில் யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பதால், அரசு ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தனர்.


