Last Updated:
கரூர் வாகன சோதனையில் 70 லட்சம் ரூபாய் சிக்கிய விவகாரத்தில், திருப்பூர் அதிமுக மாவட்ட செயலாளர் செல்வகுமரன், ஒன்றிய செயலாளர் பாலகுமரன் ஆகியோர் 5 மணி நேரம் விசாரிக்கப்பட்டனர். அதிமுக தொண்டர்கள் காவல் நில
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே வாகன சோதனையில் 70 லட்சம் ரூபாய் சிக்கிய விவகாரத்தில், அதிமுக திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் செல்வகுமரனை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றதால் பரபரப்பான சூழல் நிலவியது. வாக்காளர்களுக்கு விநியோகிக்க எடுத்துச் செல்லப்பட்டதா என்ற சந்தேகத்தில், அதிமுக மாவட்ட செயலாளர் செல்வகுமரன் மற்றும் ஒன்றிய செயலாளர் பாலகுமரன் ஆகிய இருவரையும் தாராபுரம் காவல்நிலையத்தில் வைத்து 5 மணி நேரமாக விசாரணை நடத்தினர்.
இதனால், காவல் நிலையத்தின் முன்பு நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்தனர். காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய அவர்கள், சாலைமறியலிலும் ஈடுபட்டனர். விசாரணைக்குப் பிறகு, அதிமுக நிர்வாகிகள் இருவரையும் காவல்துறையினர் விடுவித்தனர். இதற்கிடையே, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்தார்.
காவல்நிலையம் வெளியே அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் அளித்த பேட்டியில், “தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் என்பது துரோகம் செய்த தவெக வேட்பாளருக்கு மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அமைச்சர்களும் செல்ல முடியவில்லை. இதை திசை திருப்ப தோல்வி பயத்தில் இன்று விஜய் மதுராந்தகத்தில் 40 இடத்திற்கு சென்றார். எந்த இடத்திலும் மக்கள் வரவேற்பு இல்லை. இப்போது தாராபுரம் ரோடு ஷோ வருவதாக செய்தி வந்துள்ளது.
ஆளும் கட்சி தாராபுரத்தில் செய்த துரோகத்திற்கு பாடம் புகட்டும் வகையில் வாக்காளர்கள் தயாராகி உள்ளனர். இந்த கள நிலவர அறிக்கை காரணமாக மாவட்ட செயலாளரை காவல் நிலையத்தில் 5 மணி நேரத்திற்கு மேலாக அடைத்து உள்ளனர். காவல்துறையினர் எங்களுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை முதலமைச்சர் ரோடு ஷோ நடப்பது கேள்விக்குறியாகிவிடும், எந்த இடத்திற்கும் செல்ல முடியாது.
தாராபுரத்தில் எங்கும் பணம் பிடிபடவில்லை. வேறு இடத்தில் நடைபெற்றதற்கு இங்கு கதை வசனம் எழுதி உள்ளனர். எங்கள் மடியில் கனமில்லை அதனால் வழியில் பயமில்லை எந்த விசாரணைக்கும் நாங்கள் தயார் என சொல்லி உள்ளோம். அதனைத் தொடர்ந்து எங்கள் மாவட்ட செயலாளர் விடுவித்துள்ளனர். உறுதியாக சொல்கிறேன் விஜய் நாளை ரோடு ஷோ செல்ல முடியாது.” என்று அமைச்சர் ஆர்பி உதயகுமார் எச்சரிக்கை விடுத்தார்.


