தமிழ்நாட்டில் நடைபெற உள்ள ராஜ்யபா தேர்தலில் 2 இடங்களில் அதிமுகவே போட்டியிடும் என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்து உள்ளார். தேமுதிகவுக்கு அடுத்த ஆண்டு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் எனவும், அதிமுக சார்பில் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் மாநிலங்களவை எம்பி வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என்றும் அறிவித்து உள்ளார்.

