[ad_1]
Last Updated:
டொனால்ட் டிரம்ப் ராணுவத்தை வாஷிங்டனில் குவித்ததை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் பதாகைகளுடன் பேரணி நடத்தினர்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் பாதுகாப்புப் பணியை, ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த வாஷிங்டனின் பாதுகாப்பை தனது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதாக அறிவித்த அதிபர் டிரம்ப், அந்நகரில் ராணுவத்தை குவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாஷிங்டன் நகரில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக மெரிடியன் கில் பூங்கா பகுதியில் குவிந்த மக்கள், வெள்ளை மாளிகை அருகே உள்ள பிரீடம் பிளாசா வரை மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு பேரணி சென்றனர். அப்போது வாஷிங்டன் ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர்.
அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அமைந்துள்ள சிகாகோ நகருக்கும் ராணுவத்தை அனுப்ப உள்ளதாக டிரம்ப் மிரட்டல் விடுத்து வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
September 07, 2025 2:52 PM IST
அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக அமெரிக்க மக்கள் போராட்டம்! பதாகைகளுடன் வீதியில் இறங்கிய ஆயிரக்கணக்கானோர்