Last Updated:
அயதுல்லா அலி கமேனி, டிரம்ப் கனவு காண்கிறார் எனவும், ஈரான் அணுசக்தி, காசா சமாதானம், இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இஸ்ரேல் தோல்வி குறித்து விமர்சனம்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனவு கண்டுகொண்டே இருக்க வேண்டியதுதான் என ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கிண்டல் அடித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி மையங்களை அமெரிக்க விமானங்கள் தகர்த்துவிட்டதாக டிரம்ப் பெருமையாக கூறி வருவதாகவும், நல்லது, கனவு காணுங்கள் என கமேனி தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு நாட்டில் அணுசக்தி உற்பத்தி செய்ய வேண்டுமா, வேண்டாமா என்று சொல்வதற்கு அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.
டிரம்பின் காசா சமாதான முயற்சி குறித்தும் கமேனி விமர்சித்துள்ளார். மனச்சோர்வடைந்த சியோனிஸ்டுகளை உற்சாகப்படுத்தவே டிரம்ப் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்திற்குச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
காசா அமைதித் திட்டத்தை அவர் ஒரு “வெற்றுப் பேச்சு” என்று நிராகரித்ததுடன், இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இஸ்ரேல் அடைந்த தோல்வி அவர்களுக்கு நம்ப முடியாத அளவுக்கு இருந்தது என்றும் கமேனி குறிப்பிட்டுள்ளார்.
October 20, 2025 10:04 PM IST