Last Updated:
வலதுசாரி ஆதரவாளரும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க் அமெரிக்காவில் இன்று சுட்டுக்கொல்லப்பட்டார்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் இன்று பல்கலைக்கழக நிகழ்வில் பேசிக்கொண்டிருக்கும்போது மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
வலதுசாரி அரசியல் ஆர்வலர், எழுத்தாளர் என பல பரிணாமங்களில் அமெரிக்க மக்களால் நன்கு அறியப்பட்டவர் சார்லி கிர்க். இவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளர். நடந்து முடிந்த அமெரிக்காவின் 47வது அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியினருக்கும், டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாகவும் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில், சார்லி கிர்க் இன்று அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். அந்த நிகழ்ச்சியில் சார்லி கிர்க் பேசிக்கொண்டிருந்தபோது அவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் சார்லி கிர்க் கழுத்தில் குண்டு பாய்ந்து அவர் பரிதாபமாக பலியானார்.
September 11, 2025 10:13 PM IST
அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக்கொலை! அமெரிக்கா பல்கலைக்கழகத்திற்குள் நடந்த பயங்கர சம்பவம்


