Last Updated:
பொதுத்துறை வங்கிகளை பொறுத்தவரை, பஞ்சாப் நேஷனல் வங்கி ஒரு வருட கால FD திட்டத்திற்கு 6.80% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
உங்கள் பணத்தை முதலீடு செய்து அதிகரிப்பதற்கான பாதுகாப்பான மற்றும் நிலையான வழியை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், ஃபிக்ஸட் டெபாசிட் எனப்படும் FD திட்டங்கள் சரியான தேர்வாக இருக்கும். ஏனென்றால், இவை உத்தரவாதமான வருமானம், குறைந்த ஆபத்து மற்றும் நெகிழ்வான கால அவகாசங்களை முதலீட்டாளர்களுக்கு வழங்குகின்றன. பல கால அவகாசம் கொண்ட FD திட்டங்கள் இருந்தாலும் கூட, குறிப்பாக ஒரு வருட FD பிரபலமானது. ஏனெனில், இது உங்கள் பணத்தை நீண்ட காலத்திற்கு ஓரிடத்தில் வைக்காமல் நல்ல வருமானத்தை அளிக்கிறது.
ஆனால், FD முதலீட்டை பொறுத்த வரை பலர் கவனிக்கத் தவறுவது என்னவென்றால் அனைத்து வங்கிகளும் ஒரே மாதிரியான வட்டி விகிதத்தை வழங்குவதில்லை. எனவே உங்களுக்கேற்ற வட்டி வழங்கும் சரியான வங்கியைத் தேர்ந்தெடுப்பது நீங்கள் பெறப் போகும் இறுதித் தொகையில் குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை ஏற்படுத்தும். BankBazaar-ன் ஜூலை 25, 2025 தரவுகளின்படி, மூத்த குடிமக்கள் அல்லாதவர்களுக்கு ஒரு வருட FD திட்டங்களில் வழங்கப்பட்டு வரும் மிகவும் சிறந்த வட்டி விகிதங்கள் பற்றி பார்ப்போம். அதிக FD வருமானம் வேண்டுமா? முதலீடு செய்வதற்கு முன் இந்த ஒரு வருட விகிதங்களை ஒப்பிட்டுப் பாருங்கள்.
தனியார் வங்கிகளில், இண்டஸ்இன்ட் (IndusInd Bank) வங்கி கவர்ச்சிகரமான 7% வட்டி விகிதத்தை வழங்குகிறது. நீங்கள் ஒரு வருடத்திற்கான FD-யை தேர்வு செய்து இந்த வங்கியில் ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால், அது முதிர்ச்சியடையும் போது ரூ.1.07 லட்சமாகக் கிடைக்கும். ஆக்சிஸ் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி போன்ற பிற பிரபல தனியார் வங்கிகளும் இதேபோல, ஓராண்டு மெச்சூரிட்டி பீரியட் கொண்ட FD திட்டங்களுக்கு சுமார் 6.60% வட்டியை வழங்குகின்றன.
அதாவது உங்கள் ரூ.1 லட்சம் முதலீடும் சுமார் ரூ.1.07 லட்சமாக அதிகரிக்கும். மற்றொரு பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ பேங்க் தற்போது ஒரு வருட FD திட்டத்திற்கு 6.25% என்ற சற்று குறைந்த வட்டி விகிதத்தை வழங்குகிறது. எனவே இந்த வங்கியில் ஓராண்டு FD-யில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் முதிர்ச்சியின் போது உங்களுக்கு ரூ.1.06 லட்சம் கிடைக்கும்.
பொதுத்துறை வங்கிகளை பொறுத்தவரை, பஞ்சாப் நேஷனல் வங்கி ஒரு வருட கால FD திட்டத்திற்கு 6.80% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதனால் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ஒரு வருடத்திற்குப் பிறகு ரூ.1.07 லட்சமாகக் கிடைக்கும். பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி மற்றும் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா போன்ற பிற முக்கிய பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகளை போலவே, 6.60% வட்டி வீதத்தை வழங்குகின்றன. அதேநேரம், இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), தற்போது ஒரு வருட FD-க்கு 6.45% வட்டியை வழங்குகிறது. அதாவது ரூ.1 லட்சம் வைப்புத்தொகை 12 மாதங்களுக்குப் பிறகு ரூ.1.06 லட்சமாக மாறும்.
FD-க்களில் முதலீடு செய்யும் உங்கள் பணத்தின் பாதுகாப்பு என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் ஒரு பகுதியான DICGC-ஆல் ஆதரிக்கப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு வங்கியில் கணக்கு வைத்திருப்பவருக்கு ரூ.5 லட்சம் வரை உங்கள் டெபாசிட்டுகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. எனவே, நீங்கள் ஒரு வருட FD திட்டங்களில் முதலீடு செய்யத் திட்டமிட்டால், அதை செய்வதற்கு முன்பு பிற வங்கிகளில் உள்ள வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது சிறந்தது.
August 09, 2025 12:01 PM IST


