பேங்க் ஆஃப் பரோடா அறிமுகப்படுத்தி உள்ள BoB Monsoon Dhamaka டெபாசிட் திட்டம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இந்தியாவின் முன்னணி அரசுத்துறை வகையான பேங்க் ஆஃப் பரோடா தற்போது BoB Monsoon Dhamaka டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சிறப்பு டேர்ம் டெபாசிட் ப்ராடக்ட் அதிக வட்டி விகிதங்களை அளிக்கிறது.
BoB Monsoon Dhamaka டெபாசிட் திட்டமானது இரண்டு வெவ்வேறு கால அளவுகளில் கிடைக்கிறது. அதன்படி அதனுடைய வட்டி விகிதங்களும் மாறுபடும். 399 நாட்களுக்கு ஒரு வருடத்திற்கு 7.25% மற்றும் 333 நாட்களுக்கு ஓராண்டுக்கு 7.15% வட்டி விகிதம். ஜூலை 15, 2024 அன்று திறக்கப்பட்ட இந்தத் திட்டம் 3 கோடி ரூபாய்க்கும் குறைவான ரீடைல் டெபாசிட்களுக்கு பொருந்தக் கூடியதாக அமைகிறது.
அதுமட்டுமல்லாமல் சீனியர் சிட்டிசன்களுக்கு இந்தத் திட்டத்தில் கூடுதலான வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன. அதாவது 0.50% கூடுதலாக வழங்கப்படுவதன் மூலமாக 399 நாட்களுக்கு ஓராண்டுக்கு 7.75% கிடைக்கிறது. அதே நேரத்தில் 333 நாட்களுக்கு 7.65% வட்டி கொடுக்கப்படுகிறது. மேலும் நான் காலபில் (Non-callable) டெபாசிட்களுக்கு 0.15% கூடுதலாக கிடைக்கும் (1 கோடி ரூபாய் முதல் 3 கோடி ரூபாய் வரையிலான குறைந்தபட்ச டெபாசிட்களுக்கு பொருந்தும்).
BoB Monsoon Dhamaka டெபாசிட் திட்டம் அதிகபட்சமாக 399 நாட்களுக்கு ஒரு ஆண்டுக்கு 7.90% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதில் சீனியர் சிட்டிசன்களுக்கு ஒரு ஆண்டுக்கு 0.50% p.a. மற்றும் நான் காலபில் டெபாசிட்களுக்கு 0.15% கூடுதல் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:
சர்ச்சைக்குரிய தொழிலதிபரின் மகள்; தற்போது வளர்ந்துவரும் தொழிலதிபர்; யார் இந்தப் பெண்?
இந்த திட்டம் பற்றி பேசுகையில், பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் எக்ஸிக்யூடிவ் டைரக்டர் சஞ்சய் முதலியார், “BoB Monsoon டமாகா டெபாசிட் திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பேங்க் ஆஃப் பரோடா பெருமை கொள்கிறது. தங்களுடைய சேமிப்பு பணத்தில் அதிக வட்டி விகிதங்களை பெற நினைக்கும் கஸ்டமர்களுக்கு இது ஏற்றதாக அமைகிறது. அதுமட்டுமல்லாமல், கஸ்டமர்கள் தங்களுக்கு விருப்பமான கால அளவுகளை தேர்வு செய்து கொள்ளலாம். தங்களுடைய டெபாசிட்களில் அதிக ரிட்டன்களை எதிர்பார்க்கும் நபர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.”
இதையும் படிக்க: இந்தியாவின் மிகப்பெரிய DLF ரியல் எஸ்டேட் அதிபர் சொத்து மதிப்பு தெரியுமா?
BoB Monsoon Dhamaka டெபாசிட் திட்டத்தை நீங்கள் ஆன்லைனிலோ அல்லது வங்கி கிளைகளுக்கு நேரடியாகவோ சென்று திறக்கலாம். நீங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை சேமிக்க வேண்டும், அதே நேரத்தில் அதன் மூலமாக அதிக ரிட்டனகளை பெற வேண்டும் என்று நினைப்பவர்களுக்காகவே பேங்க் ஆஃப் பரோடா அறிமுகப்படுத்தி உள்ள BoB மான்சூன் டமாகா டெபாசிட் திட்டத்தில் பங்குபெற்று பலன் அடையுங்கள்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)