சில நாடுகள் welfare மாடலை கடைப்பிடிக்கின்றன. இதில் வரி செலுத்துவோர் தாங்கள் பெறும் கணிசமான அரசு உதவிக்கு ஈடாக அதிக வரிகளை செலுத்துகிறார்கள். உலகிலேயே அதிக தனிநபர் வருமான வரி விகிதங்களைக் கொண்ட நாடுகளில் பின்லாந்து, ஜப்பான், டென்மார்க் மற்றும் ஆஸ்திரியா உள்ளிட்டவை அடங்கும். இந்த நாடுகளில் உள்ள மக்கள், குறிப்பாக அதிக வருமானம் உள்ள குடிமக்கள், தங்கள் வருமானத்தில் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமாக வரிகளை செலுத்துகிறார்கள்.
இந்த அதிக வரி விகிதங்கள் அந்நாட்டு மக்களின் பொதுவான நல்வாழ்வை ஆதரிக்கின்றன. மேலும், அரசு அனைவருக்கும் சிறந்த வசதிகளை வழங்க உதவுகின்றன. பொதுவாக அதிக வரி விதிக்கும் நாடுகள், மிகவும் வளர்ந்த பொதுப் போக்குவரத்து, சிறந்த கல்வி முறைகள் மற்றும் மேம்பட்ட சமூக பாதுகாப்பு அமைப்புகளை கொண்டவையாக உள்ளன.
இருப்பினும், வரி விகிதங்கள் ஒரு தனி நபரின் வருமானம் மற்றும் அவர்களின் நாட்டின் பொருளாதாரத் தேவைகளைப் பொறுத்து வேறுபடுகின்றன. அந்த வகையில் ஒரு சில நாடுகள் வயதானவர்களின் மக்கள்தொகை அதிகம் இருப்பது, தேசிய பாதுகாப்புக்கான தேவை அல்லது நவீன பொது சேவைகளை வழங்க வேண்டிய தேவை போன்றவை காரணமாக அதிக வரி விகிதங்களை கொண்டுள்ளன. உலகில் அதிக வரி விதிக்கும் 10 நாடுகளின் பட்டியல் கீழே:
2025ஆம் ஆண்டில் அதிக தனிநபர் வருமான வரி விகிதங்களைக் கொண்ட உலகின் முதல் 10 நாடுகளை இங்கே பார்ப்போம்…
பின்லாந்து:
உலகளவில் மிக அதிக தனிநபர் வருமான வரி விகிதத்தை இந்நாடு கொண்டுள்ளது. இந்நாட்டின் தனிநபர் வருமான வரி விகிதம் 57.65% ஆகும். இது பெரும்பாலும் நாட்டின் சிறந்த பொது சேவைகளை வழங்க பயன்படுத்தப்படுகிறது. இதில் உலகளாவிய சுகாதாரம், இலவசக் கல்வி மற்றும் மேம்பட்ட சமூக பாதுகாப்பு அமைப்பு ஆகியவை அடங்கும். சிறந்த மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் உயர் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றுக்கு இந்த அதிக வரிகள் பயன்படுத்தப்படுகின்றன.
முதியோர் அதிகம் இருக்கும் காரணம் மற்றும் விரிவான சுகாதாரத் தேவைகளுக்கான நிதிக்காக ஜப்பான் நாடானது 55.95% அதிக தனிநபர் வருமான வரியை விதித்துள்ளது. இந்த அதிக வரியானது அந்நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாடு, பேரிடர் நிவாரணம் மற்றும் உயர்மட்ட பொதுப் போக்குவரத்து அமைப்புகளை பராமரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
டென்மார்க்:
டென்மார்க் நாட்டில் அதிகபட்ச வருமான வரி விகிதம் 55.9%-ஆக உள்ளது. இது அந்த நாட்டின் குடிமக்களுக்கு இலவச சமூக சேவைகள், சுகாதாரம் மற்றும் கல்வியை வழங்க பயன்படுத்தப்படுகிறது. அதிக வரி செலுத்துவதற்கு ஈடாக, மக்கள் வாழ்நாள் முழுவதும் வலுவான அரசாங்க ஆதரவைப் பெறுகிறார்கள்.
ஆஸ்திரியா:
55% தனிநபர் வருமான வரி விகிதத்துடன், ஆஸ்திரிய அரசு தனது குடிமக்களுக்கு பொது சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, நலத்திட்டங்கள் மற்றும் ஓய்வூதியங்களுக்கு நிதியளிக்கிறது. இதன் மூலம் அனைத்து குடிமக்களும் சம வாய்ப்புகள் மற்றும் ஆதரவை பெறுவதை உறுதி செய்கிறது.
ஸ்வீடன்:
உலகின் 24-வது பெரிய பொருளாதார நாடான ஸ்வீடன், வாழ்க்கைத் தரம் மற்றும் ஆயுட்காலம் ஆகியவற்றின் அடிப்படையில் 52.3% வருமான வரி விதிக்கிறது. இது வேலையில்லாதோருக்கு சலுகைகள், இலவச சுகாதாரம், கல்வி மற்றும் நீட்டிக்கப்பட்ட பெற்றோர் விடுப்பு ஆகியவற்றுக்கு வசூலிக்கப்படும் அதிக வரி மூலம் நிதியளிக்கப்படுகிறது. இதன் காரணமாக அனைவருக்கும் சமூக ஆதரவு மற்றும் தேவைகளுக்கான அணுகல் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.
அருபா:
சிறிய கரீபியன் தீவான அருபா, தன் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேண 52% என்ற அதிக வரி விகிதத்தைக் கொண்டுள்ளது. இந்நாட்டிற்கு சுற்றுலா முதன்மையான வருவாயாக இருப்பதால், தீவின் உள்கட்டமைப்பைப் பராமரிக்கவும் பொது சேவைகளை மேம்படுத்தவும் இந்த வரி பயன்படுத்தப்படுகின்றது.
பெல்ஜியம் நாட்டின் வலுவான பொது நல அமைப்பு அது விதித்துள்ள 50% வருமான வரி விகிதத்தால் நிதி பெறுகிறது. வரி மூலம் கிடைக்கும் நிதியானது வேலையின்மை காப்பீடு, சுகாதாரம், ஓய்வூதியங்கள் மற்றும் இலவச அல்லது நியாயமான விலையில் கல்வி ஆகியவற்றை உள்ளடக்கியது. அதிக வருமானம் உள்ள நபர்கள் தேவைப்படுபவர்களுக்கு உதவ அதிக பங்களிப்புகளை வழங்கும் வகையில் இந்த நாட்டின் வரி விதிப்பு முறை உள்ளது.
இஸ்ரேல்:
பொது சுகாதாரம், கல்வி மற்றும் தேசிய பாதுகாப்புக்கான நிதிக்காக இஸ்ரேல் அரசு அதிக வருமானம் ஈட்டும் மக்களிடமிருந்து 50% என்ற விகிதத்தில் வரியை பெறுகிறது. இதன் தனித்துவமான புவிசார் அரசியல் நிலை காரணமாக, நாட்டின் பாதுகாப்பிற்காக அதிக அளவில் செலவிட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்லோவேனியா:
தனது welfare மாடலுக்கான நிதிக்காக ஸ்லோவேனியா அரசு 50% தனிநபர் வருமான வரியை வசூலிக்கிறது. இந்தப் பணம் பொது சுகாதாரம், கல்வி, ஓய்வூதியம் மற்றும் வேலை பாதுகாப்பு முயற்சிகளுக்கு செலவழிக்கப்படுகிறது.
நெதர்லாந்து:
இந்நாட்டில் தனிநபர் வருமான வரி விகிதம் 49.5% ஆகும். காலநிலை மாற்றம், உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றை நிவர்த்தி செய்யும் திட்டங்களுக்கு இதன் மூலம் நிதி திரட்டப்படுகிறது. பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் உயர் வாழ்க்கைத் தரத்தை வழங்க டச்சு அரசு இந்த அதிக விகித வரிவிதிப்பைப் பயன்படுத்துகிறது.
இந்தியாவின் வரி அமைப்பு 34.94% பெருநிறுவன வரி, 18% விற்பனை வரி (GST) மற்றும் 39% தனிநபர் வருமான வரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த வரிகள் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அரசு திட்டங்களுக்கு பணம் செலுத்தப் பயன்படுத்தப்படுகின்றன.
July 02, 2025 1:24 PM IST