Singapore: சிங்கப்பூரில் சுமார் 2 கிலோவுக்கு அதிகமான போதைப்பொருள் அடங்கிய பையை கல்லாங் ஆற்றில் வீசியதாகக் கூறப்படும் 30 வயதுமிக்க வெளிநாட்டவர், 2 நாட்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.
கடந்த ஜூன் 10 ஆம் தேதி மாலை நேரத்தில், பெண்டமியர் சாலை அருகே மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) அதிகாரிகள் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு வந்தனர்.
சிங்கப்பூர்-மலேசியா அதிரடி சோதனை: 11 பேர் கைது – 41 பேர் மீது விசாரணை
அப்போது, மின்-பைக்கில் சென்றுகொண்டிருந்த 30 வயதுமிக்க வெளிநாட்டு ஆடவரை அவர்கள் கண்டனர்.
ஆனால், ஆடவர் நிற்காமல் அதிகாரிகளைக் கண்டதும் தனது மின்-பைக்கை அப்படியே விட்டுவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாக CNB இன்று (ஜூன் 14) வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தது.
அதோடு விடாத அதிகாரிகள் ஆடவரை பின்தொடர்ந்து சென்றனர். அப்போது அவர் பை ஒன்றை கல்லாங் ஆற்றில் வீசுவதை அதிகாரிகள் கண்டனர்.
பின்னர் பையை ஆற்றில் இருந்து மீட்டெடுத்த பிறகு, அந்தப் பையில் சுமார் 2,004 கிராம் க*ஞ்சா மற்றும் 518 கிராம் ஐஸ் வகை போதைப்பொருள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
கைப்பற்றப்பட்ட அவற்றின் மதிப்பு S$110,200 இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஈஸ்ட் கோஸ்ட் பார்க் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த ஆடவர்… யார் அவர்?
கைது
அதன் பின்னர் ஜூன் 12 ஆம் தேதி அன்று ஆடவரின் அடையாளத்தை கண்டறிந்த CNB அதிகாரிகள், கம்போங் யூனோஸ் அருகே அவரை கைது செய்தனர்.
தங்கி இருக்கும் இடத்துக்கு ஆடவரை அழைத்துச் சென்ற அதிகாரிகள், அங்கு பல்வேறு போதைப்பொருள் தொடர்பான உபகரணங்கள் கைப்பற்றினர்.
அவரிடம் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
போதைப்பொருள் தொடர்பான சட்டம்
சிங்கப்பூரில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருளை கடத்துவது, கடத்த முன்வருவது அல்லது கடத்தும் நோக்கத்தில் எந்தவொரு செயலையும் செய்வது குற்றமாகும் என்று CNB வலியுறுத்தியுள்ளது.
மேற்கூறிய குற்றங்களில் ஏதேனும் ஒன்றை சொந்தமாகவோ அல்லது வேறு யாருக்காகவோ செய்தாலும் குற்றம் தான்.
250 கிராமுக்கு மேல் மெத்தம்பேட்டமைன் அல்லது 500 கிராமுக்கு மேல் கஞ்சா கடத்தியதாக குற்றம் நிரூபணமானால் சிங்கப்பூரில் கட்டாய மரண தண்டனை விதிக்கப்படலாம்.
தவறுக்கு இணங்காத பணிப்பெண்ணை பெல்டால் அடித்து காயப்படுத்திய ஆடவர்
PHOTOS: Central Narcotics Bureau & Google Maps

