• Login
Tuesday, August 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அதிகாரமில்லாத டம்மி பதவி.. புதிய பொறுப்பை உருவாக்கி கொடுத்த விஜய்.. கொதிக்கும் அதிமுக மாஜிக்கள்! | Tricked with Title-Only Posts? TVK Insiders Question Vijay and Bussy Anand’s Strategy for Vijayabaskar

GenevaTimes by GenevaTimes
August 10, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
அதிகாரமில்லாத டம்மி பதவி.. புதிய பொறுப்பை உருவாக்கி கொடுத்த விஜய்.. கொதிக்கும் அதிமுக மாஜிக்கள்! | Tricked with Title-Only Posts? TVK Insiders Question Vijay and Bussy Anand’s Strategy for Vijayabaskar
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Yogeshwaran Moorthi

Time
Published: Sunday, August 9, 2026, 13:09 [IST]

சென்னை: தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அதிகாரம் இல்லாத பதவிகளை கொடுத்து முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் ஏமாற்றிவிட்டதாக அக்கட்சியினரால் பேசப்பட்டு வருகிறது. தவெகவில் அமைப்புச் செயலாளர் பதவிக்கோ, துணை பொதுச்செயலாளர் பதவிக்கோ எந்த அதிகாரமும் இல்லை என்று புலம்பும் நிர்வாகிகள், உள்ளாட்சித் தேர்தலில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்குமா என்ற சந்தேகத்தில் இருக்கின்றனர்.

தவெக ஆட்சி அமைத்த பின் அதிமுகவில் இருந்து சிட்டிங் எம்எல்ஏ-க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் என்று பலரும் அந்த பக்கம் சாய்ந்தனர். குறிப்பாக சி விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருவரும் தவெகவில் இணைந்தது பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. ஜூன் மாதம் கடைசியில் அதிமுகவில் இருந்து விலகிய இருவரும், ஜூலை முதல் வாரத்தில் தவெகவில் ஐக்கியமாகினர்.

Vijayabaskar

அப்போதே இணைப்பு விழாவிற்கு விஜய் வராததால், அவரின் ஆதரவாளர்கள் அப்செட்டாகினர். இதன்பின் அதிமுகவில் இருந்து வந்தவர்கள் அனைவரையும் ஒரே நாளில் பனையூரில் வைத்து விஜய் சந்தித்தார். அதன்பின் விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதியில் பணிகளை தொடங்கிவிட்டார். தவெகவினருக்கு பிரியாணி விருந்து வைப்பது, நிர்வாகிகளுடன் இணக்கம் என்று அக்கட்சியினருடன் நெருக்கம் காட்டி வந்தார்.

மதுரையில் அவருக்கு மட்டும் பதவி கிடையாது.. கல்லாணை வைத்த வேட்டு.. தவெக எம்எல்ஏ கோபிசன் அதிருப்தி!

மதுரையில் அவருக்கு மட்டும் பதவி கிடையாது.. கல்லாணை வைத்த வேட்டு.. தவெக எம்எல்ஏ கோபிசன் அதிருப்தி!

இருப்பினும் விஜயபாஸ்கருக்கு எந்த பதவியும் அளிக்கப்படவில்லை. தவெகவில் இணைந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்துவிட்ட சூழலில், பொறுப்பு அறிவிக்காதது ஏன் என்று புதுக்கோட்டையில் அவரின் ஆதரவாளர்கள் கொந்தளிக்க தொடங்கிவிட்டனர். உள்ளாட்சித் தேர்தலும் இன்னும் 6 மாதத்தில் வரும் என்பதால், அவரை நம்பி வந்தவர்கள் மத்தியில் ஒருவித குழப்ப மனநிலை ஏற்பட்டது.

இதனை விஜயபாஸ்கரும் நேரடியாகவே தவெக தலைமைக்கு கூறிவிட்டார். இதன்பின் தான் உடனடியாக ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டோருடன் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. அப்போது மாவட்டச் செயலாளர் பதவியை கொடுத்தால் பின் விளைவுகள் ஏற்படும் என்று கருதிய தவெக தலைமை, உடனடியாக புதிய பொறுப்புகளை உருவாக்கி இருக்கிறது. அதுதான் அமைப்புச் செயலாளர் மற்றும் துணை பொதுச்செயலாளர் என்பவை.

மீண்டும் மதுரை சரவணனுக்கு ஆப்பு.. தவெகவிலும் மரியாதை இல்லை.. பதவி கொடுக்காமல் தவிர்த்த விஜய்!

மீண்டும் மதுரை சரவணனுக்கு ஆப்பு.. தவெகவிலும் மரியாதை இல்லை.. பதவி கொடுக்காமல் தவிர்த்த விஜய்!

இந்த இரு பொறுப்புகளுக்குமே அதிகாரம் கிடையாது. மாவட்ட அமைப்புச் செயலாளர் என்ற பொறுப்பு மாவட்டச் செயலாளர்களை ஒருங்கிணைக்கும் பதவி தான். மற்றபடி அந்த பதவிக்கு எந்த அதிகாரமும் இல்லை. இதனால் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். அதிகாரமில்லாத டம்மி பதவியை வைத்து நமக்கு எப்படி பதவி பெற்றுக் கொடுப்பார் என்ற முனுமுனுப்புகள் எழுந்துள்ளன.

அதேபோல் மாவட்டச் செயலாளர் பதவி என்றாலும் கூட ஒரு தொகுதிக்கு மட்டுமே தவெக தலைமை நியமனம் செய்கிறது. மண்டல பொறுப்பை எதிர்பார்த்த விஜயபாஸ்கருக்கு ஒரு தொகுதிக்குள் அடைத்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இதனால் அவரின் ஆதரவாளர்கள் விரைவில் மாற்று கட்சிகளுக்கு நகரக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

English summary

Tricked with Title-Only Posts? TVK Insiders Question Vijay and Bussy Anand’s Strategy for Vijayabaskar

Read More

Previous Post

11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம் யாழில்!

Next Post

வங்கி ஊழியர்களுக்கு வந்துள்ள புது சிக்கல்..!! இனி இந்த வேலைகளையும் அவங்க தான் பார்க்கனும்..!! | Why Indian Banks Want Employees to Do More Than Banking as Digital Transactions Surge

Next Post
வங்கி ஊழியர்களுக்கு வந்துள்ள புது சிக்கல்..!! இனி இந்த வேலைகளையும் அவங்க தான் பார்க்கனும்..!! | Why Indian Banks Want Employees to Do More Than Banking as Digital Transactions Surge

வங்கி ஊழியர்களுக்கு வந்துள்ள புது சிக்கல்..!! இனி இந்த வேலைகளையும் அவங்க தான் பார்க்கனும்..!! | Why Indian Banks Want Employees to Do More Than Banking as Digital Transactions Surge

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin