ஏர் இந்தியாவில் பணிபுரியும் 100 விமானிகளுக்கு ஸ்கூட் (Scoot) விமானங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் மலிவு கட்டண நிறுவனமான ஸ்கூட் விமான நிறுவனத்தில் பணிபுரிய சுமார் 100 ஏர் இந்தியா விமானிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.
லாரி மோதி ஊழியர் பரிதாப மரணம் – “வேலைக்கு சேர்ந்து 8 மாசம் தான் ஆகுது” – வெளிநாட்டு ஓட்டுநர் கைது
இந்தத் திட்டம் தன்னார்வ அடிப்படையில் செயல்படும் என்றும், மேலும் ஸ்கூட் விமான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் விதமாக அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ஏர் இந்தியா விமானிகளுக்கு Embraer விமானங்களில் பயிற்சி பெறவும், சர்வதேச அனுபவத்தை பெறுவதற்கான வாய்ப்பும் இதன் மூலம் கிடைக்கும்.
இந்த திட்டம், ஏர் இந்தியா மற்றும் ஸ்கூட் ஆகிய இரு நிறுவனங்களுக்குமான வெற்றி என்று ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரான கேம்பல் வில்சன் கூறியுள்ளார்.
அதிகரிக்கவுள்ள விமான தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், விமானங்கள் மற்றும் சேவை இடங்களை உயர்த்தவும் இது உதவும் என கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சுமார் 2.4 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் இந்தியாவிற்கும் அல்லது இந்தியாவில் இருந்தும் பயணித்ததாக சொல்லப்பட்டுள்ளது, இதில் 65% பயணம் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு பணிப்பெண்களுக்கு (Migrant domestic workers) முக்கிய அறிவிப்பு – செப்.1 முதல் கட்டாயம்

