• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

அதிகரிக்கும் ஒர்க் பெர்மிட்.. நிறைந்து வழியும் விடுதிகள் – வெளிநாட்டு ஊழியர்களை நம்பியிருப்பதை குறைத்துக்கொள்ள அறிவுரை

GenevaTimes by GenevaTimes
April 19, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
அதிகரிக்கும் ஒர்க் பெர்மிட்.. நிறைந்து வழியும் விடுதிகள் – வெளிநாட்டு ஊழியர்களை நம்பியிருப்பதை குறைத்துக்கொள்ள அறிவுரை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Work Permit: சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்களுக்காக (Singapore Foreign workers) கிட்டத்தட்ட 45,000 படுக்கைகள் கொண்ட ஆறு புதிய தங்கும் விடுதிகள் (Dormitories) கட்டப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இதனை மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் கடந்த வாரம் அறிவித்தார்.

இதில் குறிப்பாக 2,400 படுக்கைகள் கொண்ட மனிதவள அமைச்சகத்தின் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியும், 10,500 படுக்கைகள் கொண்ட பயனீயர் லாட்ஜ் தங்கும் விடுதியும் அடங்கும்.

மனிதவள அமைச்சகத்தின் விடுதி அடுத்த 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கட்டி திறக்கப்பட உள்ளதாகவும், பயனீயர் லாட்ஜ் தங்கும் விடுதி அக்டோபரில் கட்டி முடிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

2025ல் S Pass அனுமதியில் புதிதாக சிங்கப்பூர் வருபவரா / இங்கு வேலை செய்பவரா? – வேலை, சம்பளம் தொடர்பான முக்கிய அப்டேட்

செம்பவாங் தங்கும் விடுதிகள் மூடல்

கிட்டத்தட்ட 9,000 ஊழியர்கள் தங்கி வந்த இரண்டு செம்பவாங் தங்கும் விடுதிகள் இந்த மாதம் மூடப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதியில் படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டதாக டாக்டர் கோ குறிப்பிட்டார், மேலும் தங்கும் விடுதிகளின் குத்தகைகளை நீட்டிக்கவும் அரசாங்கம் செயல்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

வெளிநாட்டு ஊழியர்களை நம்பியிருப்பதை குறைத்து கொள்ள வேண்டும்

தங்கும் விடுதிகளை மட்டுமே நம்பியிருப்பது என்பது நீண்ட கால தீர்வை தராது என்பதால், நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை நம்பியிருப்பதை குறைத்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

விடுதிகளில் நிலவும் படுக்கை பற்றாக்குறை காரணமாக, தங்கள் ஊழியர்களுக்கு இந்த ஏப்ரல் மாத இறுதிக்குள் வேறு மாற்று வழிகளை நிறுவனங்கள் தேடி அலைகின்றன.

படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக தங்கும் விடுதி நடத்துநர்களுடன் அரசாங்கம் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒர்க் பெர்மிட் அனுமதியில் சிறப்பான மாற்றம் – ஜூலை முதல் அமல்; வெளிநாட்டு ஊழியர்கள் மகிழ்ச்சி

தொடர்ந்து அதிகரிக்கும் ஒர்க் பெர்மிட் (work permit)

இந்த நிலையில், ஒர்க் பெர்மிட் (work permit) அனுமதி வைத்திருப்பவர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வந்தால் இந்த பிரச்சனை முடிவுக்கு வராது என்று அவர் மேலும் கூறினார்.

எனவே, வெளிநாட்டு ஊழியர்களை நம்பியிருக்கும் போக்கை குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும், உற்பத்தித்திறனை வளர்த்துக்கொள்ளும் நடவடிக்கைகளை முதலாளிகள் பின்பற்ற வேண்டும் என்று டாக்டர் கோ வலியுறுத்தினார்.

இந்த நடவடிக்கைகளில், தேவைப்படும் மனிதவளத்தைக் குறைக்க தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வது குறித்தும் அல்லது உற்பத்தித்திறன் அளவை வளர்த்துக்கொள்ள ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவது குறித்து அவரின் பேச்சு இருந்தது.

வேலை அனுமதி அட்டைகள், சம்பளம், வேலை வாய்ப்பு போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள t.me/tamildailysg டெலிக்ராம் குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

The post அதிகரிக்கும் ஒர்க் பெர்மிட்.. நிறைந்து வழியும் விடுதிகள் – வெளிநாட்டு ஊழியர்களை நம்பியிருப்பதை குறைத்துக்கொள்ள அறிவுரை appeared first on Tamil Daily Singapore.

Read More

Previous Post

மாநிலங்களுக்கு வேப்ஸ், மின்-சிகரெட் விற்பனையைத் தடை செய்ய அதிகாரம் உள்ளது – Malaysiakini

Next Post

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி! மேலும் சிலரைத் தேடும் பணி தீவிரம்!!

Next Post
தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி! மேலும் சிலரைத் தேடும் பணி தீவிரம்!!

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி! மேலும் சிலரைத் தேடும் பணி தீவிரம்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin