மின்சாரக் கட்டண உயர்வுக்கு நிகராக, நீர் கட்டணமும் மிகக் குறைந்த அளவினால் அதிகரிக்கப்படும் என்று வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (02) நடைபெற்ற நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
மின்சாரக் கட்டணத்தில் ஏற்படும் மாற்றங்கள் நீர் கட்டணத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக விளக்கிய அமைச்சர், மின்சாரக் கட்டணத்தின் மூலம் நீர் கட்டண செலவினத்தில் சுமார் 12% வீதம் உள்ளடக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மிகச் சிறிய தொகை
தற்போதைய நிலவரப்படி அந்த 12% வீதத்தில் 18% வீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நுகர்வோர் மத்தியில் நீர் கட்டண உயர்வு குறித்து எழும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில், இந்த மாற்றம் அலகு ஒன்றிற்கு மிகக் குறைந்த அளவிலேயே அமையும் என்பதால், கட்டண உயர்வு மிகச் சிறிய தொகையாகவே இருக்கும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
