Last Updated:
மது பழக்கத்திற்கு அடிமையானதை கண்டித்ததால் ஆத்திரமடைந்த சிறுவன், தனது அண்ணன் மற்றும் நிறைமாத கர்ப்பிணியை கொலை செய்துள்ளார்.
குஜராத்தில் கணவன் – மனைவியை கொலை செய்து வீட்டிற்குள் புதைதைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் ஜூனாகத் மாவட்டத்தில் ஷோபவட்லா பகுதியில் ஆசிரமம் ஒன்று உள்ளது. அதன் அருகே, பெண் ஒருவர் கடந்த 28 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். 22 வயதான இவரின் மூத்த மகன் ஷிவம்கிரிக்கு கஞ்சன் குமாரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுடன் ஷிவம்கிரியின் தம்பியும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
கத்ஞசன் குமாரி 6 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவரின் கொழுந்தனாரான சிறுவன் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். நாளுக்கு நாள் அவரின் அக்கப்போரை தாங்க முடியாமல் சகோதரர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் குடித்துவிட்டு வந்த தம்பியிடம், ஷிவம்கிரி சண்டை போட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த சிறுவன் வீட்டில் இருந்த இரும்பு பைப்பை எடுத்து அண்ணனை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில், படுகாயமடைந்த ஷிவம்கிரி நிகழ்விடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார். அதை பார்த்த அவரின் மனைவி விஷயத்தை வெளியே கூறி விடுவார் என்று அந்த சிறுவன் அஞ்சியுள்ளார். உடனே கர்ப்பிணி என்றும் பார்க்காமல் அவரையும் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளார். தொடர்ந்து, வீட்டிற்குள்ளேயே குழிதோண்டு இருவரின் உடலையும் புதைத்துள்ளார். பின்னர், எதுவும் தெரியாதது போன்று ஊருக்குள் சகஜமாக நடமாடியுள்ளார்.
மகனின் கொலைபாதக செயலை அறிந்தபோதும், அவரின் தாயாரும் அதை மூடி மறைக்க முயற்சித்துள்ளார். இதையடுத்து, கஞ்சன் குமாரி வீட்டிற்கு போன் செய்து, உங்கள் மகள் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக தாயும், மகனும் கூறியுள்ளனர். மேலும், விபத்தில் உடல் சிதைந்ததால் உடனடியாக அடக்கம் செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அதற்கு, பெண்ணின் குடும்பத்தினர் விபத்து தொடர்பான போட்டோக்களை அனுப்புங்கள் என கூறியுள்ளனர். தொடர்ந்து அவர்கள் அனுப்பிய போட்டோவை பார்த்ததும் பெண் வீட்டாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தம்பதியை கொலை செய்த சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மது போதையில் ஏற்பட்ட சண்டையில் இரண்டைக் கொலை செய்யப்பட்டதா? அல்லது அதற்குப் பின்னால் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் அண்ணன் மற்றும் கர்பிணியாக இருந்த அண்ணியை அடித்துக் கொலை செய்த சிறுவன், வீட்டிற்குள்ளேயே உடல்களை புதைத்த சம்பவம் குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
November 02, 2025 7:24 AM IST


