• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அணு ஆயுதங்களை பயன்படுத்த புதின் ஒப்புதல்: மேலும் தீவிரமடைகிறது ரஷ்யா – உக்ரைன் போர் | Russia Readies To Strike Ukraine With Nukes

GenevaTimes by GenevaTimes
November 19, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
அணு ஆயுதங்களை பயன்படுத்த புதின் ஒப்புதல்: மேலும் தீவிரமடைகிறது ரஷ்யா – உக்ரைன் போர் | Russia Readies To Strike Ukraine With Nukes
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மாஸ்கோ: உக்ரைன் மீ​தான போரில் அணு ஆயுதங்களை பயன்​படுத்த ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதல் அளித்​துள்ளார்.

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி 1,000 நாட்கள் நிறைவடைந்​துள்ள நிலை​யில், இந்த போரில் அணு ஆயுதங்​களை பயன்​படுத்துவது தொடர்பான புதிய கொள்​கை​யில் புதின் நேற்று கையெழுத்​திட்​டுள்​ளார்.

ரஷ்யா – உக்ரைன் இடையில் கடந்த 2022-ம் ஆண்டு பிப்​ரவரி மாதம் போர் தொடங்​கியது. இந்த போர் தொடங்கி நேற்​றோடு 1,000 நாட்கள் நிறைவடைந்​துள்ளது. ரஷ்யா​வின் தாக்​குதலால் உக்ரைனில் ஆயிரக்​கணக்​கானோர் உயிரிழந்​துள்ளனர். நாட்​டின் அடிப்படை உள்கட்​டமைப்பு தகர்ந்​துள்ளது.

இதனிடையே, ரஷ்யா மீது தாக்​குதல் நடத்த உக்ரைனுக்கு அமெரிக்கா உட்பட மேற்​கத்திய நாடுகள் ராணுவ உதவி வழங்கி வந்தன. நீண்ட தூரம் சென்று இலக்​குகளை துல்​லியமாக தாக்​கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி இருந்​தது. எனினும், இந்த ஏவுகணை​களைப் பயன்​படுத்த கட்டுப்​பாடுகள் விதிக்​கப்​பட்​டிருந்தன.

தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்​காலம் முடிவடைய உள்ளது. இந்நிலை​யில், தாங்கள் வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்​கும் ஏவுகணைகளை பயன்​படுத்த உக்ரைனுக்கு பைடன் அனுமதி வழங்​கி​யுள்​ளார். இந்த ஏவுகணைகளை உக்ரைன் பயன்​படுத்​தும்​பட்​சத்​தில் ரஷ்யா​வுக்கு தீவிர பாதிப்பு ஏற்படும். இந்த சூழலில், உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்​களைப் பயன்​படுத்த ரஷ்யா முடிவு செய்​துள்ளது.

இதற்​கேற்ப தன் அணு ஆயுதக் கொள்​கை​யில் ரஷ்யா மாற்றம் கொண்டு வந்துள்ளது. இதன்​படி, அணு ஆயுதம் இல்லாத நாடு (உக்​ரைன்), அணு ஆயுதம் வைத்​திருக்​கும் நாட்டுடன் (அமெரிக்கா) கூட்டணி வைத்து ரஷ்யா மீது போர் தாக்​குதல் மேற்​கொண்​டால், பதிலுக்கு அந்நாட்​டின் மீது ரஷ்யா​வும் அணு ஆயுதங்​களைப் பயன்​படுத்​தும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. குறிப்​பாக, பாலிஸ்​டிக் ஏவுகணை உட்பட நவீன ஏவுகணை​கள், ட்ரோன்கள் மூலம் ரஷ்யா மீது வான்​வழித் தாக்​குதல் மேற்​கொள்​ளப்​படும்​பட்​சத்​தில், பதிலுக்கு அணு ஆயுதங்​களைப் பயன்​படுத்த நேரிடும் என்று ரஷ்யா எச்சரித்​துள்ளது. இது தொடர்பான ஆவணங்​களில் ரஷ்ய அதிபர் புதின் நேற்று கையெழுத்​திட்​டுள்​ளார்.

இது குறித்து ரஷ்ய அதிபர் மாளி​கை​யின் செய்தித் தொடர்​பாளர் கூறுகை​யில், “தற்​போதைய சூழ்​நிலைக்கு ஏற்ப எங்களது அணு ஆயுதக் கொள்​கை​களில் மாற்றம் கொண்டு வருவது முக்​கி​யம். அணு ஆயுதங்களை தவிர்ப்​ப​தற்கான வழிகளையே நாங்கள் பார்க்​கிறோம். ஆனால், அவற்​றை பயன்​படுத்த வேண்டிய சூழ்​நிலைக்கு தள்ளப்​பட்​டால், எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் அணு ஆயுதங்​களைப் பயன்​படுத்த நேரிடும். அணு ஆயுதம் இல்லாத நாடு அணு ஆயுதம் வைத்​திருக்​கும் நாட்டுடன் இணைந்து போரில் ஈடுபட்​டால் அது கூட்டு தாக்​குதலாகவே கருதப்​படும்” என்று தெரி​வித்​துள்ளார்.

மேற்​கத்திய நாடுகள் உக்ரைனுக்கு உதவுவதை நிறுத்த வேண்​டும் என்று புதின் தொடர்ந்து எச்சரித்து வந்தார். எனினும், மேற்​கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்கி வந்தன. அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடு​கள், தாங்கள் வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்​கும் ஏவுகணையை பயன்​படுத்த உக்ரனைக்கு அனுமதி வழங்​கினால், ரஷ்யா மற்றும் நேட்டோ இடையிலான போராக அது மாறும் என்று புதின் எச்சரித்​திருந்​தார். மேலும், அணு ஆயுத பயன்​பாட்டுக் கொள்​கை​யில் மாற்றம் கொண்டு​வரப் போவதாக ரஷ்யா கூறி வந்தது. கடந்த செப்​டம்பர் மாதத்​தில் சில மாற்​றங்கள் செய்​யப்​பட்டன. இந்​நிலை​யில், தற்​போது உக்​ரைனுக்கு எ​திரான ​போரில் அணு ஆ​யுதங்​களைப் பயன்​படுத்​தும் வகை​யில் ​திருத்​தங்​கள் செய்​யப்​பட்​டுள்​ளது. ரஷ்​யா​வின் இந்த அறி​விப்பு ​காரண​மாக, ரஷ்யா – உக்​ரைன் ​போர் தீ​விரமடை​யும் சூழல்​ உருவாகி​யுள்​ளது.



Read More

Previous Post

மின் வாகன பேட்டரிகளுக்கான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும்: ஃபிக்கி அமைப்பு வலியுறுத்தல் | FICCI seeks GST cuts on EV batteries,

Next Post

தமிழர் பகுதிகளில் நடந்த அரசியல் மாற்றம்! துரத்தியடிக்கப்பட்ட கருணா – பிள்ளையான் – டக்ளஸ்

Next Post
தமிழர் பகுதிகளில் நடந்த அரசியல் மாற்றம்! துரத்தியடிக்கப்பட்ட கருணா – பிள்ளையான் – டக்ளஸ்

தமிழர் பகுதிகளில் நடந்த அரசியல் மாற்றம்! துரத்தியடிக்கப்பட்ட கருணா - பிள்ளையான் - டக்ளஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin