அதில் தொடக்க கட்டமாக சிறிய அளவில் பியூட்டி பார்லர் தொடங்குவது, தங்கள் ஹோம் பேக்கிங் தொடங்குவது போன்ற தொழிலில் அதிகளவில் பெண்கள் ஈடுபடுவதை பார்க்கலாம்.
அதுபோலத்தான் தூத்துக்குடியைச் சேர்ந்த பியூலா என்பவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஹோம் பேக்கிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். நகரம் முதல் கிராமம் வரை தற்போது ஹோம் பேக்கிங் என்பது அதிகரித்து விட்டது.
இந்த சூழலில் பியூலா தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் எனவும் விரைவாக மக்கள் மத்தியில் இடம் பிடிக்க வேண்டும் என புதுமையான தேடலில் ஈடுபட்டுள்ளார்.
அதற்காக ஹோம் பேக்கிங் மூலம் கிடைக்கும் வருமானத்தைச் சேமித்து தற்போது தூத்துக்குடியில் முதல் முறையாக பேக்கிங் பொருட்களை விநியோகிக்கும் வெண்டிங் மெஷினை அறிமுகப்படுத்தியுள்ளார்.
வழக்கமாக குளிர்பானங்களுக்கு வெண்டிங் மெஷின் பார்த்திருப்போம். ஆனால் வித்தியாசமாக வெண்டிங் மெஷின் மூலம் கேக் விற்பனை செய்யும் இந்த ஐடியாவுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இது குறித்து பியூலா கூறுகையில், “நான் எம்.பி.ஏ முடித்துள்ளேன். கல்லூரி பயிலும் போதே கே.எஃப்.சி, ஸ்டார்பக்ஸ் போன்ற கடைகளில் பார்ட் டைமாக பணிபுரிந்துள்ளேன். அப்படி தான் எனக்கு குக்கிங்கில் ஆர்வம் வந்தது. அதனால் வீட்டிலேயே சிறியதாக ஹோம் பேக்கிங் தொடங்கினேன்.
அதிலிருந்து வரும் வருமானத்தைச் சேர்த்து வைத்து இந்த வெண்டிங் மெஷினை தொடங்கியுள்ளேன். தூத்துக்குடியில் பேக்கிங் பொருட்களுக்கு என்று வெண்டிங் மெஷின் கிடையாது. அதனால் சற்று புதிதாக இருக்கும் என்பதற்காக இதை தொடங்கினேன்.
ஆரம்பத்தில் இதனால் 25,000 வரை நஷ்டம் அடைந்து விட்டது. ஏனென்றால் இது கூல்டிரிங்க்ஸ் போல் கிடையாது தினமும் ரீஃபில் செய்ய வேண்டும். இதனால் தினமும் பேக்கிங் செய்து, பிரெஷாக வைத்து வருகிறேன். தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இன்னொரு கஷ்டம் என்னவென்றால் இதனை அமைக்க பல இடங்களில் கேட்டும் யாரும் சம்மதிக்கவில்லை. கடைசியாகச் சின்னத்துரை & கோ-வில் ஒத்துழைப்பு கொடுத்தனர்.
என்னைப் போல பல பெண்களும் பல ஐடியாக்கள் கொண்டுள்ளார்கள். துணிச்சலாகச் செய்து பாருங்கள், கொஞ்சம் கடினமாக உழைத்தால் வாழ்வில் உயரலாம்.” எனத் தெரிவித்தார்.
Thoothukkudi,Tamil Nadu
July 08, 2025 12:09 PM IST