பொத்துவில் பாணமையில் இருந்து அட்டாளைச்சேனை பகுதிக்கு சொட்கண் துப்பாக்கி ரவைகளை கடத்தி வந்து 3 பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கார் ஒன்றில் நேற்று(25.06.2026) சட்டவிரோதமான முறையில் இடம்பெற்ற கடத்தலே இவ்வாறு முறியடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த கைதில் 8 சொட்டகண் 20 வெற்று ரவைகளை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசேட கண்காணிப்பு
சம்பவம் குறித்து தெரிய வருகையில்,

அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான நேற்று
இரவு அட்டாளைச்சேனை பகுதியில் விசேட கண்காணிப்பில்
ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்போது அங்கு சென்ற கார் ஒன்றினை சுற்றிவளைத்து சோதனையிட்டபோது அங்கிருந்து
8 சொட்டகண் ரவைகள் மற்றும் 20 வெற்று ரவைகளை மீட்டதுடன் பாணமை பிரதேசத்தைச்
சோந்த 3 பேரை கைது செய்தனர்.
இவார்கள் வியாபாரத்துக்காக சட்டவிரோதமாக இவற்றை கடத்தி
வந்துள்ளதாக அதிரடிப்படையினர் ஆரம்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களையும் சான்றுப் பொருட்களை
ஒப்படைத்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
