Last Updated:
உங்களுக்கு நன்மை தரும் ஆஃபர்களை வழங்கும் கிரெடிட் கார்டுகளை தேர்வு செய்வது முக்கியம். அந்த வகையில் கார்டு ஹோல்டர்களுக்கு கேஷ்பேக் ஆஃபர்களை வழங்கும் கிரெடிட் கார்டுகளின் பட்டியலை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கிரெடிட் கார்டு வாங்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறீர்களா? அப்படி என்றால் உங்களுடைய தேவைக்கு ஏற்ப ஆஃபர்களையும், டீல்களையும் அள்ளித் தரக்கூடிய கிரெடிட் கார்டுகளை எப்படி தேர்வு செய்வது என்று குழம்பிய நிலையில் இருந்தால் இந்தப் பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். ஒரு கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது, அந்த கார்டு வழங்கும் வெவ்வேறு அம்சங்களை மதிப்பீடு செய்து பார்ப்பது அவசியம்.
ஒரு சில கார்டுகள் கேஷ்பேக் ஆஃபர்களையும், ஷாப்பிங் டிஸ்கவுண்டுகளையும் வழங்கும். அதே சமயத்தில் சில கார்டுகள் ஏர்போர்ட் லவுஞ்சில் தங்குவதற்கான இலவச அனுமதி மற்றும் கோல்ஃப் கோர்ஸ் போன்ற பிரத்தியேகமான நன்மைகளை வழங்குகின்றன. ஆகையால், உங்களுக்கு நன்மை தரும் ஆஃபர்களை வழங்கும் கார்டுகளை தேர்வு செய்வது முக்கியம். அந்த வகையில் கார்டு ஹோல்டர்களுக்கு கேஷ்பேக் ஆஃபர்களை வழங்கும் கிரெடிட் கார்டுகளின் பட்டியலை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
வியாபாரி சார்ந்த கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் ஆன்லைனில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செலவுக்கும் 5% கேஷ்பேக்கை இந்த கார்டு வழங்குகிறது. மேலும், ஆஃப்லைன் பேமெண்ட்களுக்கு 1% கேஷ்பேக் கிடைக்கும்.
இந்த கார்டு மூலமாக மின்சாரம், இன்டர்நெட், கேஸ், DTH மற்றும் மொபைல் ரீசார்ஜ் போன்ற பில் பேமெண்ட்களை Google Payல் செய்வதற்கு 5% கேஷ்பேக் கிடைக்கிறது. இது தவிர Swiggy, Zomato மற்றும் Ola பிளாட்ஃபார்ம்களில் நீங்கள் செய்யும் பேமெண்ட்களுக்கு 4% கேஷ்பேக்கும், பிற அனைத்து செலவுகளுக்கும் 1.5% கேஷ்பேக்கும் கிடைக்கிறது.
அமேசானில் நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் இந்த கார்டு பாயிண்ட்களை வழங்குகிறது. பிரைம் மெம்பர்களுக்கு 5X பாயிண்டுகளும், பிரைம் மெம்பர்ஷிப் வைத்திருக்காத மெம்பர்களுக்கு 3X பாயிண்டுகளும், கூட்டாண்மையில் உள்ள வியாபாரிகளுக்கு 2X பாயிண்டுகளும் கிடைக்கிறது.
Myntraஇல் செலவு செய்யும் கார்டு ஹோல்டர்களுக்கு 7.5% கேஷ்பேக் கிடைக்கிறது. இதற்கான உச்சவரம்பு என்பது ஒவ்வொரு ஸ்டேட்மெண்ட் காலாண்டுக்கும் 4,000 ரூபாயாக அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர Flipkart மற்றும் ClearTrip பிளாட்ஃபார்ம்களில் 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதற்கும் ஒவ்வொரு வியாபாரிக்கும் ஒவ்வொரு ஸ்டேட்மெண்ட் காலாண்டுக்கு 4,000 ரூபாய் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர குறிப்பிட்ட சில வியாபாரிகளுக்கு அன்லிமிடெட் 4% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
இந்த கார்டு Amazon, BookMyShow, Cult.fit, Flipkart, Myntra, Sony LIV, Swiggy, Tata CLiQ, Uber மற்றும் Zomato போன்ற பிளாட்ஃபார்ம்களில் 5% கேஷ்பேக்கும், பிற செலவுகளுக்கு 1% கேஷ்பேக்கும் வழங்கப்படுகிறது.
July 11, 2025 3:24 PM IST