Last Updated:
அட்சய திருதியையொட்டி புதுச்சேரியில் கடந்தை ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு நகை விற்பனை அதிகரித்ததாக நகை கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
அள்ள.. அள்ள.. குறையாத செல்வத்தை தரும் அட்சய திருதியை நாளையொட்டி,தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகைக் கடைகளில் பெரும்பாலானவைகாலை 5 மணிக்கே விற்பனையை நேற்று தொடங்கி விட்டன. அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் வாழ்வு செழிக்கும் என்று நம்பிக்கை கொண்ட பலர், தங்கம் விலை என்னதான் ஏறிக்கொண்டே சென்றாலும், ஒரு குண்டு மணி அளவுக்காவது தங்கம் வாங்கிவிட வேண்டும் என்று ஆர்வம் காட்டினர்.
அதனால், புதுச்சேரி, சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் உள்ள பிரபல நகைக்கடைகளில் அதிகாலை முதலே கூட்டம் அதிகமாக இருந்தது. அட்சய திருதியை நாள் என்றாலும் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய முன்தின விலையான ஒரு பவுன் தங்கம் ரூ.71,840-க்கும், ஒரு கிராம் 8,980-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு அட்சய திருதியை மே மாதம் 10-ந் தேதி வந்தது. அன்றைக்கு ஒரு கிராம் தங்கம் ரூ.6,705-க்கும், ஒரு பவுன் ரூ.53,640-க்கும் விற்பனையானது. அன்று மட்டும் தமிழகத்தில் 20 ஆயிரம் கிலோ என்ற அளவுக்கு ரூ.15 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை ஆனது. அது முந்தைய (2023) ஆண்டைவிட 20 சதவீதம் விற்பனை அதிகம் என்று கூறப்பட்டது.
இதுகுறித்து புதுச்சேரி நகை வியாபாரிகள் சங்க செயலாளர் சீனிவாசன் கூறியதாவது:
புதுச்சேரியில் கடந்த ஆண்டு ஒரு பவுன் தங்கம் 54 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு தங்கம் விலை ஓரளவு கட்டுக்குள் இருந்த நிலையில் சுமார் 250 கோடிக்கு மேல் வியாபாரம் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது தங்கத்தின் விலை இரு மடங்கு உயர்ந்து உள்ளதால் அட்சய திருதியை அன்று வியாபாரம் என்பது, கடந்த ஆண்டை விட 40% குறைவாகவே விற்பனை செய்யப்பட்டது.
மேலும் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் நகை வாங்க மக்கள் தயங்குகிறார்கள். கடுமையான விலையேற்றம் காரணமாக கடந்த ஆண்டை விட தற்போது 40 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது வியாபாரிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்தார்.
Puducherry (Pondicherry),Puducherry,Puducherry (Pondicherry)

